வீரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வீரம் (bravery, courage, valour) என்பது துணிவான ஒரு உணர்வு ஆகும். தான் சந்திக்கும் எவ்வொரு சவாலையும் சந்தித்து, வலி, ஆபத்து, எதிர்பாரா நிகழ்வுகள், எதிர்ப்பு, என பலவற்றைக் கடந்து வெற்றி காண முயல்வதே வீரம். சரி என்று பட்டதை யார் தடுத்தாலும் சிரம் தாழ்த்தாது செய்து முடிப்பதே வீரம்.

புறப்பொருளில் வீரம்

புறப்பொருள் இலக்கியங்களில் வீரம் என்ற உணர்வு முதன்மை பெறுகின்றது. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்று எல்லா புறப்படலங்களிலும் வீர மறவரின் துணிவும், அவர்கள் எதிரிகளை எதிர்த்து போராட தயங்காமையும் கூறப்பட்டுள்ளது.

அகப்பொருளில் வீரம்

அகத்தில் பெரும்பாலும் வீரம் முன்மொழியாவிடினும், பல செயல்களில் தலைவனும், தலைவியும், பாங்கியும், நற்றாயும், செவிலித்தாயும், பல்வேறு சமூக உறுப்பினர்களும் (பரத்தையர், காமக்கிழத்தி உட்பட) தான் விரும்பியதை அடைய வீரத்தை உபயோகிக்க வேண்டியுள்ளது.

வீரத்தின் வகைகள்

  1. தன் நாட்டைக்காக்கும் வீரம்
  2. நேர்மையாக இருத்தல்
  3. தன் கடமையினை எவ்வித தடை வரினும் சிரமேற்று வெற்றி பெறுதல்
  4. நினைத்ததை சாதிக்க வீரத்தின் உபயோகம்
  5. விடாமுயற்சி
  6. தன்னைச் சார்ந்தோரைக் (குடும்பம் மட்டுமின்றி) காக்க வீரம்
"https://tamilar.wiki/index.php?title=வீரம்&oldid=20605" இருந்து மீள்விக்கப்பட்டது