பயணம் (2011 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பயணம்
இயக்கம்ராதா மோகன்
தயாரிப்புபிரகாஷ் ராஜ்
கதைராதா மோகன்
இசைபிரவீண் மணி
நடிப்பு
ஒளிப்பதிவுகே. வி. குகன்
படத்தொகுப்புகிஷோர் டி
கலையகம்சைலன்ட் மூவிஸ்
விநியோகம்ஏ. ஜி. எஸ். என்டர்டைன்மெண்ட்
வெளியீடு11 பெப்ரவரி 2011 (2011-02-11)
ஓட்டம்1:55:07
நாடுஇந்தியா
மொழி
  • தமிழ்
  • தெலுங்கு

பயணம் 2011 ஆம் ஆண்டு தமிழ் மொழியிலும், ககணம் என்ற பெயரில் தெலுங்கிலும்[1] ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தின் கதை இந்திய விமானம் கடத்தப்பட்ட உண்மை சம்பவத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது[2][3]. ராதாமோகன் இயக்கத்தில் நாகர்ஜுனா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாக்கப்பட்டது. பிரகாஷ் ராஜ் இப்படத்தைத் தயாரித்தார். இப்படத்தை இந்தியில் கோல்ட்மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனத்தார் மேரே ஹிந்துஸ்தான் கி கசம் என்ற பெயரில் 2012 ஆம் ஆண்டு மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர்[4].

கதைச்சுருக்கம்

சென்னையிலிருந்து டெல்லி செல்லும் விமானம் நடுவானில் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறது. எதிர்பாராவிதமாக விமானம் பழுதடையவே திருப்பதி விமான நிலையத்தில் தரையிறக்கப்படுகிறது. தீவிரவாதிகள் 100 கோடி ரூபாய் பணம், இந்திய சிறையிலிருக்கும் அவர்கள் தலைவன் யூசுப்கானின் விடுதலை மற்றும் அவர்கள் அனைவரும் தப்பிச்செல்ல ஒரு விமானம் ஆகியன வேண்டும் என்ற நிபந்தனைகளை விதிக்கின்றனர்.

தேசிய பாதுகாப்புப் படை வீரர் மேஜர் ரவீந்திரா (நாகர்ஜுனா) தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைகின்றனர். ரவி தீவிரவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டாம் என்றும் அதிரடி தாக்குதல் நடத்தி விமானத்திலுள்ள தீவிரவாதிகளைக் கொன்று பயணிகளை மீட்கலாம் என்றும் ஆலோசனை தருகிறார். அதை ஏற்க மறுக்கும் அரசுத்துறைகளின் மேலதிகாரிகள் பயணிகளை பாதுகாப்பாக மீட்கும்பொருட்டு தீவிரவாதிகளின் நிபந்தனைகளை நிறைவேற்ற ஒத்துக்கொள்கின்றனர்.

விமானத்தில் இருக்கும் பயணிகள் நிலை: பிரபலமான நடிகர் சைனிங் ஸ்டார் சந்திரகாந்த் (பிருத்விராஜ்) அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் அவருடைய தீவிர ரசிகன் பாலாஜி (சாம்ஸ்), கணவனிடம் சண்டையிட்டுப் பிரிந்த மனைவி, அவளுக்கு ஆறுதல் சொல்லும் தம்பதி, பாதிரியார் (எம். எஸ். பாஸ்கர்), புரட்சிகரமான கருத்துக்களைப் பேசும் சுபாஷ் (இளங்கோ குமரவேல்), முன்னாள் ராணுவ வீரர் (தலைவாசல் விஜய்), கல்லூரி மாணவி சந்தியா (சனாகான்), மருத்துவர் வினோத் (ரிஷி), சோதிடர் நாராயண சாஸ்திரி, (மனோபாலா) விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் இவர்களுக்கு இடையே நடைபெறும் உரையாடல்கள் என்று விமானத்தினுள் நடப்பவை கோர்வையான காட்சிகளாக்கப்படுகின்றன.

யூசுப்கானை அழைத்துவரும் வாகனம் விபத்தில் சிக்கி அவன் இறந்துபோகிறான். இந்த தகவலைத் தீவிரவாதிகளிடமிருந்து மறைத்து யூசுப்கான் உயிரோடு இருப்பதாக நம்பவைக்க, யூசுப்கான் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட ஒருவனை நடிக்கச்செய்து போலியான காணொளி ஒன்றை ஒளிப்பதிவு செய்து அவர்களை நம்பவைக்கின்றனர். அதன்பின் விமானத்தில் இருந்த பயணிகளை எப்படி பாதுகாப்பாக மீட்டனர் என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

இசை

பாடல்கள் இல்லாத திரைப்படம். படத்தின் பின்னணி இசையை அமைத்தவர் பிரவீண் மணி[5]. படத்தின் முன் விளம்பரத்திற்காக மதன் கார்க்கியின் வரிகளில் ஒரு பாடல் மட்டும் உருவாக்கப்பட்டது[6].

வெளியீடு

சென்னையில் முதல் வார வசூல் ரூபாய் 99 லட்சம் ஆகும்[7]

பரிந்துரை

மேற்கோள்கள்

  1. "ககணம்".
  2. "விமானக்கடத்தல்".
  3. "பயணம்". Archived from the original on 2010-11-15. பார்க்கப்பட்ட நாள் 2019-03-07.
  4. "பயணம்".
  5. "பயணம் - ஸ்ரீ சரண்".
  6. "ட்ரைலர் வெளியீடு".
  7. "படவசூல்". Archived from the original on 2021-06-02. பார்க்கப்பட்ட நாள் 2019-03-07.
  8. "காந்தகர் மலையாளத் திரைப்படம்".

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பயணம்_(2011_திரைப்படம்)&oldid=35254" இருந்து மீள்விக்கப்பட்டது