பட்டத்து ராணி (1992 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பட்டத்து ராணி
இயக்கம்மணிவாசகம்
தயாரிப்புராஜேஸ்வரி மணிவாசகம்
பி. எஸ். மணி
கதைமணிவாசகம்
கே. சி. தங்கம் (வசனம்)
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஆர். ஹச். அசோக்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்ராஜபுஷ்பா பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 14, 1992 (1992-08-14)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டத்து ராணி (Pattathu rani) 1992 ஆம் ஆண்டு விஜயகுமார் மற்றும் கெளதமி நடிப்பில், மணிவாசகம் இயக்கத்தில், ராஜேஸ்வரி மணிவாசகம் மற்றும் பி. எஸ். மணி தயாரிப்பில், தேவா இசையில் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.

கதைச்சுருக்கம்

ஜலகண்டேஸ்வரன் (கவுண்டமணி) மற்றும் ராயப்பன் (செந்தில்) இருவரும் சகோதரர்கள். அவர்களுக்கு சொந்தமான பல வீடுகள் கொண்ட குடியிருப்பில் வாடகைக்கு தங்கள் குடும்பத்துடன் வசிப்பவர்கள் முனியம்மா (மனோரமா, விஸ்வநாதன் (ஜனகராஜ்), கணேசன் (டெல்லி கணேஷ்), கோயமுத்தூர் (மணிவாசகம்) ஆகியோர். இவர்கள் யாரும் பல வருடங்களாக வாடகை தராததால் அவர்களிடம் வாடகையைப் பெற ராயப்பன் சொல்லும் யோசனையை ஜலகண்டேஸ்வரன் செயல்படுத்துகிறார். இந்தக் குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டுக்குக் குடிவருகிறார்கள் நடுத்தர வயதுக்காரரான சுந்தரம் (விஜயகுமார்) மற்றும் அவரது இளவயது மனைவி உஷா (கௌதமி). உஷாவின் அழகில் மயங்கி அவளைக் கவர்வதற்காக ஜலகண்டேஸ்வரன், விஸ்வநாதன், கணேசன், கோயமுத்தூர் ஆகியோர் முயற்சி செய்கிறார்கள். உஷாவின் முன்னிலையில் வாடகை கேட்பதால் அனைவரும் வாடகை சரியாகக் கொடுக்கிறார்கள். குடியிருப்பில் உள்ள பெண்கள் உஷாவைப் பற்றித் தவறாக நினைப்பதால் உஷா ஏன் தன்னைவிட வயதான சுந்தரத்தைத் திருமணம் செய்துகொண்டாள் என்ற உண்மையை உஷாவின் நிறுவனத்தில் பணியாற்றும் முனியம்மா மற்றவர்களுக்குச் சொல்கிறாள்.

பணக்கார வீட்டுப் பெண் உஷா. அவளிடம் வேலைக்காரராகப் பணியாற்றுபவர் சுந்தரம். சுந்தரம் தன் ஐந்து தங்கைகள் அனைவருக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டியுள்ளதால் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். உஷாவின் பெற்றோர்கள் பார்க்கும் பணக்கார மாப்பிள்ளையின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அந்த திருமணத்தை மறுக்கிறாள் உஷா. தன்னிடம் வேலைசெய்யும் நல்லவரான சுந்தரத்தைத் திருமணம் செய்து கொள்கிறாள் உஷா. உஷாவை அவர்களது பெற்றோர்கள் வீட்டைவிட்டுத் துரத்துகின்றனர். உஷாவின் கதையைக் கேட்டதும் அவளின் நல்ல குணத்தை அனைத்துப் பெண்களும் புரிந்துகொள்கின்றனர். அந்த குடியிருப்பில் உள்ள அனைவரும் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கின்றனர். அங்கு தன்னை விரும்பும் அனைவருக்கும் உஷா எப்படி தக்க பாடம் கற்பித்துத் திருத்துகிறாள் என்பதை நகைச்சுவையாகச் சொல்லி முடிக்கிறார்கள்.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் காளிதாசன். படத்தின் பாடல்கள் 1992 ஆம் ஆண்டு வெளியானது.

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 அட தொட்டா மனோ, கே. எஸ். சித்ரா 4:37
2 தேவதை கே. எஸ். சித்ரா 6:20
3 முத்து முத்து எஸ். ஜானகி 4:28
4 பெண்ணாக பிறந்தோரே மனோ, எஸ். ஜானகி 4:41
5 சவுண்ட் கொடு கிருஷ்ண சந்திரன், மனோ, ராதிகா 4:24

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்