ந. வளர்மதி
ந. வளர்மதி, (N. Valarmathi) (31,சூலை, 1959- 02, செப்டம்பர், 2023) இஸ்ரோவின் ரிசாட் 1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குநர், இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு, சரல் செயற்கைக்கோள், ஜிசாட்-7, செவ்வாய் சுற்றுகலன் திட்டம், ஜிசாட்-14 எனும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பல திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெருமைகளை உடையவர். முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் நினைவாக தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் அப்துல் கலாம் விருதினை பெற்ற முதலாவது நபர் இவராவார்.
பிறப்பு
வளர்மதி தமிழ்நாட்டில் அரியலூரில் 1959 சூலை 31 அன்று பிறந்தார்ர்.[1] நடராஜன் - ராமசீத்தா தம்பதியருக்கு மூன்று பிள்ளைகளில் மூத்தவராக பிறந்தவர்.
கல்வி
அரியலூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர். கல்லூரி படிப்பை அரியலூர் அரசு கலைக் கல்லூரியிலும் தொடர்ந்து கோயம்புத்தூர், அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இளம்பொறியியல் மின்னியலிலும், சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுபொறியியல், மின்னனுவியல், தொடர்பியலிலும் படித்து முதல் நிலையில் தேர்ச்சி பெற்றதையடுத்து 1984 ஆம் ஆண்டு இசுரோவில் இணைந்தார். DRDO, இசுரோ இரண்டிலும் வாய்ப்புகள் வந்தபோது இசுரோவினைத் தேர்ந்தெடுத்தார்.
விண்வெளித் தொழில் நுட்ப ஆய்வு
1984 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் இணைந்து பணியாற்றி வரும் 2012-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ‘ வீவாணி படிமமாகச் செயற்கைக்கோள்' (ரிசாட்-1) திட்ட இயக்குநராகப் பணியாற்றினார். இது 24 மணி நேரமும் படம் எடுத்து அனுப்பக் கூடியது.
குடும்பம்
கணவர் ஜி. வாசுதேவன் வங்கியாளராக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பெற்ற பட்டங்களும் சிறப்புக்களும்
- விருதுகள்
- டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் விருது - 2015 [4][5][6]
- தி இந்து தமிழ் நாளிதழின் தமிழ் திரு விருது, 2017.[7]
மேற்கோள்கள்
- ↑ "இதன் திட்ட இயக்குநரான அரியலூரைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி முனைவர் ந. வளர்மதி". Sep 24, 2012 1:07 AM. http://www.dinamani.com/tamilnadu/article1275354.ece?service=print. பார்த்த நாள்: 16 ஆகத்து 2015.
- ↑ https://www.dinamani.com/tamilnadu/2023/sep/04/isro-scientist-n-valarmathi-passes-away-4066764.html
- ↑ https://www.google.com/search?q=%E0%AE%A8.+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF&rlz=1C1GCEA_enIN999IN999&oq=%E0%AE%A8.+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF&aqs=chrome.0.69i59.19284j1j7&sourceid=chrome&ie=UTF-8#ip=1
- ↑ இஸ்ரோ திட்ட இயக்குநருக்கு அப்துல்கலாம் விருது: சுதந்திர தின விழாவில் முதல்வர் வழங்கினார்
- ↑ "69வது சுதந்திர தினவிழா: விஞ்ஞானி வளர்மதிக்கு அப்துல்கலாம் விருது - ஜெயலலிதா வழங்கினார்" இம் மூலத்தில் இருந்து 2015-08-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150817204409/http://www.maalaimalar.com/2015/08/15094529/ISRO-scientist-Abdul-Kalam-Awa.html.
- ↑ "Tamil Nadu CM Jayalalithaa awards heavy cargo woman truck driver, ISRO scientist". தி எகனாமிக் டைம்ஸ். 15 August 2015. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/tamil-nadu-cm-jayalalithaa-awards-heavy-cargo-woman-truck-driver-isro-scientist/articleshow/48494299.cms. பார்த்த நாள்: 15 August 2015.
- ↑ "‘தி இந்து’ தமிழ் திரு விருதுகள்- தமிழ் ஆளுமைகளைப் போற்றுவோம்!". கட்டுரை (தி இந்து தமிழ்). 15 செப்டம்பர் 2017. http://tamil.thehindu.com/opinion/reporter-page/article19691129.ece. பார்த்த நாள்: 15 செப்டம்பர் 2017.