தமிழ் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான ஆங்கிலச் சொற்கள்
Jump to navigation
Jump to search
பின்வரும் சொற்கள் லிப்கோ தமிழ் தமிழ் ஆங்கிலம் அகராதி யில் இருந்து பதியப்படுகின்றது. முழு அகராதியிலும் இது ஒரு சிறு பிற்சேர்க்கையே, என்பதால் பதிப்பகத்தார் ஆட்சோபனை தெரிவிக்கமாட்டார் என்ற ஒரு நம்பிக்கையில் சேர்க்கப்படுகின்றது.
- இலக்கணம் - Grammar
- எழுத்ததிகாரம் - Orthography
- சொல்லதிகாரம் - Etymolgy
- சொற்றொடர் இலக்கணம் - Syntax
- யாப்பிலக்கணம் - Prosody
- அணி - Figure of speech
- சொல்லிலக்கணம் - Parsing
- சூத்திரம் - Rule or Article
- அதிகாரம் - Section
- இயல் - Chapter
- பாயிரம் - Preface
- உயிரெழுத்துக்கள் - Vowels
- குறில் - Short Vowels
- நெடில் - Long Vowels
- மெய்யெழுத்துக்கள் - Consonants
- வல்லினம் - Hard consonants (surds)
- மெல்லினம் - Soft consonants (nasals)
- இடையினம் - Medial consonants (liquids)
- சுட்டெழுத்து - Demonstrative letter
- வினாவெழுத்து - Interrogative letter
- விதி - Rule
- பொது விதி - General rule
- சிறப்பு விதி - Special rule
- குற்றியலுகரம் - shortend u
- குற்றியிலிகரம் - shortend e
- பகுபதம்(இலக்கணம்) - Divisble word
- பகுதி - Root
- பகாப்பதம் - Indivisible word
- மாத்திரை - Quantity
- பெயர் - Noun
- வினை - Verb
- இடைச்சொற்கள் - Conjunctions, Particles
- வியப்பிடைச்சொல் - Interjection
- உரிச்சொல் - Attributive
- பெயர் உரிச்சொல் - Adjective
- வினை உரிச்சொல் - Adverb
- பண்புப்பெயர் - Abstract noun
- பிறவினை - Causative verb
- ஏவல்வினை - imperative verb
- காலம் - Tense
- இறந்தகாலம் - Past tense
- நிகழ்காலம் - Present tense
- எதிர்காலம் - Future tense
- புணர்ச்சி - Combination
- வேற்றுமைப் புணர்ச்சி - Casal Combinations
- வேற்றுமை - Case
- முதல் வேற்றுமை - Nominative case
- எழுவாய் - Nominative case
- இரண்டாம் வேற்றுமை - Accusative case
- மூன்றாம் வேற்றுமை - Instrumental case
- நான்காம் வேற்றுமை - Dative case
- ஐந்தாம் வேற்றுமை - Ablative case
- ஆறாம் வேற்றுமை - Genitive case
- ஏழாம் வேற்றுமை - Locative case
- எட்டாம் வேற்றுமை - Vocative case
- விளி வேற்றுமை - Vocative case
- வேற்றுமையுருபு - Case ending
- தொகைநிலைத்தொடர் Elliptical expressions
- தொகாநிலைத்தொடர்கள் - Unelliptical expressions
- இரட்டித்தல் - Re-duplication
- திணை - Caste
- பால் - Gender
- எண் - Number
- இடம்- Person
- ஆண்பால் - Masculine Gender
- பெண்பால் - Femine Gender
- பலர்பால் - Common Gender
- ஒன்றன்பால் - Neuter Singular
- பலவின்பால் - Neuter Plural
- தன்மை, தன்னிலை - First Person
- முன்னிலை - Second Person
- படர்க்கை - Third Person
- ஆகுபெயர் - Meyonymy, Synecdoche
- எண்ணுப்பெயர் - Numberals
- சாரியைகள் - Euphonic particles
- சொற்களின் வகை - Parts of Speech
- வினைமுற்று - Finite Verb
- எச்சம் - Participles, Infinitives
- பெயரெச்சம் - Adjectival participle
- வினையெச்சம் - Adverbial participle, gerund
- குறிப்புவினை - Symbolic verb
- வியங்கோள் - Optative verb
- மூன்று காலங்களுக்கும் பொதுவான வினையெச்சம் - Infinitve mood
- எதிர்கால வினையெச்சம் - Subjunctive mood
- எழுவாய் - Subject
- பயனிலை - Predicate
- செயப்படுபொருள் - Object
- செயப்படுபொருள் குன்றாவினை - Transitive Verb
- செயப்படுபொருள் குன்றியவினை - Intransitive Verb
- செய்வினை - Active Verb
- செயப்பாட்டுவினை - Passive Verb
- உடன்பாடு - Affirmation
- எதிர்மறை - Negation
- ஒருபொருள் குறித்த பல சொற்கள், ஒத்தசொல் - Synonyms
- பல பொருள் குறித்த ஒரு சொல் - Homonym
- வாழாநிலை - Grammatical expressions
- இடகரடக்கல் மங்கலம் - Euphemism
- மரபு - Idiom, Usage
- ஒருபொருட்பன்மொழி - Redundant words
- அடைமொழி - Eplthet
- பொருள்கோள் - Prose order
- அசை - Metrical syllable
- மொழிப்பயிற்சி - Language exercise
- வாக்கியம் - Sentence
- தனிவாக்கியம் - Simple Sentence
- தொடர்வாக்கியம் - Compound sentence
- கலவை வாக்கியம் - Complex sentence
- வாக்கியப் பொருத்தம் - Sentence agreement or Concord
- இடம்விட்டு எழுதல் - Spacing
- சேர்த்து எழுதல் - Non-splitting of words
- சொற் பொருத்தம் - Appropriate words
- நிறுத்தற் குறிகள் - Punctuation marks
- வாக்கிய மாற்றம் - Transformation of sentences
- வல்லினம் மிகும் இடம் - Doubling of hard consonants
- நேர்கூற்று - Direct speech
- அயற்கூற்று - Indirect speech
- உவமையணி - Simile
- உருவக அணி - Metaphor
- உயர்வு நவிற்சியணி - Hyperbole
- வஞ்சப்புகழ்ச்சியணி - Irony
- சிலேடையணி - Pun
- வேற்றுமையணி - Anthighesis
- மேன்மேலும் உயர்தல் - Climax
- மேன்மேலும் தாழ்தல் - Anti - Climax
- சொற்பின் வருநிலையணி - Tautophony
- பொருட்பின் வருநிலையணி - Tautology
- விரோத அணி - Epigram
- உபசார வழக்கு - Transferred epithet
- குறிப்புமொழி, இரட்டைக் கிளவி - Onomotopoeia
- எதுகை, இயைபுத் தொடைகள் - Rhyme
- முரண்தொடை - Oxymoron, Antethesis
- மோனை - Alliteration
- அழகுணர்ச்சி - Aesthetic
- எதிர்சொற்கள் - Antonyms
- ஓசை இல்லாதவை - Breathed
- உயர்தனிச் செம்மொழி - Classical language
- தொடர்ச்சி - Coherence
- நடை- Diction
- அகர வரிசை, அகராதி - Dictionaries
- இனிமை - Euphony
- எடுத்துக்காட்டுகள் - Examples
- இடை அண்ணம் - hard palate
- பேச்சுப் பழக்கங்கள் - Linguistic habits
- குரல் ஏற்றத் தாழ்வு - Modulation of voice
- பத்தி - Paragraph
- இடைப்பிறவரல்குறிகள் - Paranthesis
- ஒலியியல் - Phonetics
- மொழி நூல் - Philology
- வெடிப்பொலிகள் - Explosives
- சுருக்கி எழுதல் - Precise writing
- உச்சரிப்பு - Pronunciation
- உரைநடை - Prose
- பழமொழிகள் - Proverbs
- ஓசை இனிமை - Rhythm
- இழிவழக்கு - Vulgarisms
- மிடற்றொலி - Gutturals
- நாக்குஒலி - Palatals
- தலையொலி - Cerebrals
- பல்லொலி - Dentals
- இதழ் ஒலி - Labials
- எதிர் ஒலி - Alveoloar
- உம்மைத்தொகை - Asyndeton
- வீறுகோளணி - Climax
- சுருங்கச் சொல்லல் - Epigram
- அங்கதம் - Sarcasm
துணை நூல்கள்
(1998). லிப்கோ தமிழ் தமிழ் ஆங்கிலம் அகராதி. சென்னை: தி லிட்டில் ப்ளவர் கம்பெனி.
மேலும் காண்க
மேற்கத்திய மொழிகளின் இலக்கணக் குறியீடுகளுக்கு நேரான தமிழ்ச் சொற்கள்