சாந்தா துக்காராம்
Jump to navigation
Jump to search
சாந்தா துக்காராம் | |
---|---|
இயக்கம் | சுந்தர் ராவ் நட்கர்ணி |
தயாரிப்பு | பி. இராதாகிருஷ்ணா |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | ராஜ்குமார் உதயகுமார் கே. எஸ். அஸ்வத் பாலகிருஷ்ணா லீலாவதி ராஜஸ்ரீ சிவாஜி கணேசன் |
ஒளிப்பதிவு | டி. வி. இராஜாராம் |
படத்தொகுப்பு | சுந்தர் ராவ் நட்கர்ணி பி. கே. கிருஷ்ணன் |
கலையகம் | சிறீ கணேஷ் பிரசாத் மூவிஸ் |
விநியோகம் | விஜயா பிக்சர்ஸ் சர்க்கியூட் |
வெளியீடு | 1963 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ், கன்னடம் |
சாந்தா துக்காராம் (Santha Thukaram) என்பது 1963 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் ஆகும். இதை சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கியிருந்தார். பி. ராதாகிருஷ்ணா தயாரித்திருந்தார். கன்னடத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது.இந்த படத்தில் ராஜ்குமார், உதய்குமார், சிவாஜி கணேசன், கே. எஸ். அஸ்வத், பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.[1][2] இந்தப் படம் 11வது தேசிய திரைப்பட விருதுகளில் கன்னடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை பெற்றது.[3] திரைப்படம் கவிஞரும் துறவியுமான துக்காராமின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
நடிப்பு
- துக்காராமாக ராஜ்குமார்
- உதயகுமார்
- கே. எஸ். அஸ்வத்
- மும்பாஜியாகபாலகிருஷ்ணா
- சி. வி. சிவசங்கர்
- பி. வாதிராஜ்
- எச். ஆர். அனுமந்த ராவ்
- சுந்தர் ராவ்
- எச். கிருஷ்ண சாஸ்திரி
- குப்பராஜ்
- ஜீஜாவாகலீலாவதி
- பண்டரிபாய்
- மேனகாவாகராஜஸ்ரீ
- மாதாவாக கலா
- காசியாக சுமா
ஒலிப்பதிவு
படத்தின் பால்களுக்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "Santha Thukaram". chiloka.com. http://chiloka.com/movie/santha-thukaram-1963.
- ↑ "Santha Thukaram". nthwall.com இம் மூலத்தில் இருந்து 2015-01-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150113004638/http://www.nthwall.com/ka/Santha-Tukaram-1982/9219803047.
- ↑ "11th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா இம் மூலத்தில் இருந்து 2 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170502124428/http://iffi.nic.in/Dff2011/Frm11thNFAAward.aspx.
- ↑ "Santha Thukaram Songs". raaga.com. http://play.raaga.com/kannada/album/santha-thukaram-k0000824.