குரு சோமசுந்தரம்
குரு சோமசுந்தரம் | |
---|---|
பிறப்பு | 3 செப்டம்பர் 1975 மதுரை, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2011 – தற்போது |
குரு சோமசுந்தரம் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் திரையுலகிற்குள் வந்தார். அதன் பின் பாண்டிய நாடு, ஜிகர்தண்டா மற்றும் ஜோக்கர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவின் ஹீத் லெட்ஜர் என்றழைக்கப்படுகிறார். தற்பொழுது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார்.
திரைப்படத்துறை
குரு சோமசுந்தரம் 2002 - 2011 ஆண்டு காலத்தில் கூத்துப்பட்டறையில் இணைந்து நாடகங்களை உருவாக்கினார்.
2003 ஆம் ஆண்டு சந்திரஹரி நாடகத்தில் இவரைக் கண்ட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, 2008 ஆம் ஆண்டு இவரை அழைத்து தனது ஆரண்ய காண்டம் எனும் திரைப்படத்தில் 'காளையன்' எனும் வேடத்தில் நடிக்க வைத்தார்[1]. அவ்வேடம் பலத்த வரவேற்பை பெற்றது. பின், 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தின் 'கடல்' திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.
கூத்துப்பட்டறையிலிருந்து வெளியேறிய பின் 2013 ஆம் ஆண்டு 5 சுந்தரிகள் எனும் திரைப்படத்தில் புகைப்படக் கலைஞராக நடித்ததின் வாயிலாக மலையாளத் திரையுலகில் கால் பதித்தார்[1]. இதே ஆண்டில் இயக்குனர் சுசீந்தரனின் பாண்டிய நாடு திரைப்படத்தில் விசாலின் அண்ணனாக வேடமேற்று நடித்தார். 2014 ஆம் ஆண்டில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா' திரைப்படத்தில் நடிப்புக் கலை பயிற்றுனராக நடித்திருந்தார். நிகழ் வாழ்க்கையிலும் பாபி சிம்காவுக்கு இவர் நடிப்புக் கலையை பயிற்றுவித்தார்.[2].
குறும்படங்கள்
ஆண்டு | தலைப்பு | கதாப்பாத்திரம் | மொழி | தளம் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2016 | ஒரு பொய் | தமிழ் | வலையொளி | ||
2017 | இறுதி அறம் | தமிழ் | வலையொளி | ||
2019 | டெஸ்டினேஸியா | தமிழ் | வலையொளி | ||
2020 | குகை ஓவியங்கள் | தமிழ் | வலையொளி |
திரைப்பட விவரம்
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | படம் | வேடம் | குறிப்புகள் |
---|---|---|---|
2011 | ஆரண்ய காண்டம் | காளையன் | |
2013 | கடல் | கோவில் குட்டி | |
2013 | 5 சுந்தரிகள் | புகைப்படக் கலைஞர் | மலையாளத் திரைப்படம் |
2013 | பாண்டிய நாடு | நாகராஜ் | |
2014 | ஜிகர்தண்டா | முத்து | |
2015 | 49 - O | ஆறுமுகம் | |
2015 | பென்ச் டாக்கீஸ் - த பர்ஸ்ட் பென்ச் | டேவிட் | |
2015 | தூங்காவனம் | விட்டல் ராவின் உதவியாளர் | |
2015 | கோகினூர் | நாயக்கர் | மலையாளத் திரைப்படம் |
2016 | ஜோக்கர் | மன்னர் மன்னன் | |
2016 | குற்றமே தண்டனை | பாலன் | |
2017
|
யாக்கை | ஶ்ரீ ராம் | |
2018 | ஓடு ராஜா ஓடு
|
மனோகர் | |
2018 | வஞ்சகர் உலகம் | சம்பத்
என்கிற துரைராஜ் |
|
2019 | பேட்ட | மாவட்ட ஆட்சித் தலைவர் | |
2021 | மாறா | சொக்கு | |
2021 | மஞ்ச சட்ட பச்ச சட்ட | அக்கா | |
2021 | ஜெய் பீம் | பீ.பீ.செல்லப்பாண்டியன் | |
2021 | க் | ஞானப்பிரகாசம் | |
2021 | மின்னல் முரளி | செல்வன்/ வெள்ளிடி வெங்கிடி | (மலையாளத் திரைப்படம்) |
2021 | இது வேதாளம் சொல்லும் கதை | வேதாளம் | உருவாக்கத்திலுள்ளது |
2021 | மாமனிதன் | உருவாக்கத்திலுள்ளது | |
2021 | காதலிக்க யாருமில்லை | உருவாக்கத்திலுள்ளது | |
2021 | பரமகுரு | உருவாக்கத்திலுள்ளது | |
2021 | இந்தியன்-2 | உருவாக்கத்திலுள்ளது |
வலைத் தொடர்
ஆண்டு | வலைத் தொடர் தலைப்பு | கதாப்பாத்திரம் | மொழி |
---|---|---|---|
2020 | டாப்லெஸ் | கல்கி (அரசியல்வாதி) | தமிழ் |