ஆலங்குடி சோமு
Jump to navigation
Jump to search
ஆலங்குடி சோமு | |
---|---|
பிறப்பு | 12 டிசம்பர் 1932 ஆலங்குடி , சிவகங்கை மாவட்டம் , தமிழ்நாடு |
இறப்பு | 6 ஜுன் 1997 |
பணி | பாடலாசிரியர், கவிஞர், தயாரிப்பாளர் |
ஆலங்குடி சோமு (Alangudi Somu; 12 திசம்பர் 1932 - 6 சூன் 1997) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது 1973 - 1974 பெற்றுள்ளார்.[2]
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 1960 இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.[3]
தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை[4]
சில பிரபல பாடல்கள்
- ஆண்டவன் உலகத்தின் முதலாளி... (தொழிலாளி)
- பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்... (சொர்க்கம்)
- தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை... (அடிமைப் பெண்)
- வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று... (பத்தாம்பசலி)
- ஒரு கொடியில் (காஞ்சித்தலைவன்)
- பொட்டிருந்தும் பூவிருந்தும் (பூம்புகார்)
- கத்தியை தீட்டாதே (விளக்கேற்றியவள்)
- மலருக்கு தென்றல் (எங்க வீட்டுப் பிள்ளை)
- என்னடி செல்லகண்ணு (தேன்மழை)
- மேகங்கள் திரண்டுவந்தால் (நான் ஆணையிட்டால்)
- வெள்ளி நிலா வானத்திலே (காதல் படுத்தும் பாடு)
- ஆடலுடன் பாடலைக்கேட்டு (குடியிருந்த கோயில்)
- என்னம்மா ராணி (குமரிக்கோட்டம்)
- இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களின் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.
தயாரித்த படங்கள்
மேற்கோள்கள்
- ↑ [http://www.yarl.com/forum3/index.php?showtopic=134005 என்னை விட்டால் யாரும் இல்லை
- ↑ "இதே நாளில்". தினமலர். 5 ஜூன் 2019 இம் மூலத்தில் இருந்து 2021-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210606120317/https://www.dinamalar.com/news_detail.asp?id=2291709. பார்த்த நாள்: 6 ஜூன் 2021.
- ↑ ஜூன் 05, பதிவு செய்த நாள்:; 2019. "இதே நாளில் அன்று - Dinamalar Tamil News" (in ta). https://m.dinamalar.com/detail.php?id=2291709.
- ↑ ஆயிரம் கைகள் மறைத்துநின்றாலும் – கவிஞர் முத்துக்கூத்தன்