அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்பவர் ஒரு வைணவ அடியாராவார். இவர் திருப்பாவை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, அமலனாதிபிரான் போன்ற வைணவ இலக்கியங்களுக்கு விளக்கவுரை எழுதினார். வடக்கு திருவீதி பிள்ளை என்பவருக்கு மகனாக மார்கழி மாத அவிட்ட நட்சத்திரத்தில், திருவரங்கத்தில் பிறந்தார். இவரது மூத்த சகோதரர் பிள்ளை லோகாசாரியார் ஆவார். இவர் தமது தந்தை வடக்கு திருவீதி பிள்ளையிடம் பாடம் பயின்றவர். பெரியவாச்சான் பிள்ளைக்குப் பின்பு, இவர் ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்வியப்பிரபந்தங்கள் சிலவற்றுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்.[1]

உபதேச இரத்தினமாலை

உபதேச இரத்தினமாலையில் இவர் எழுதிய படைப்புகளை மணவாள மாமுனிகள் சிறப்பித்துள்ளார்.

நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு

எஞ்சாமை யாவைக்கும் இல்லையே – தம் சீரால்

வைய குருவின் தம்பி மன்னு மணவாள முனி

செய்யுமவை தாமும் சில

மணவாள மாமுனிகள், உபதேச இரத்தினமாலை, பாடல் 47
மொழிபெயர்ப்பு

பட்டரின் சீடர் நஞ்சீயர் சில பிரபந்தங்களுக்கு விளக்கவுரைகள் எழுதியிருந்தாலும், பெரியவாச்சான் பிள்ளையைப் போல் அனைத்து பிரபந்தங்களுக்கும் எழுதவில்லை. பிள்ளை லோகாசார்யரின் திருத்தம்பியாரான, உயர்ந்த திருக்கல்யாண குணங்களை உடைய அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருளிச்செயல்களிலும் ஏனைய சாத்திரங்களிலும் கொண்டிருந்த ஆழ்ந்த அறிவால் சில பிரபந்தங்களுக்கு அற்புதமான விளக்கவுரைகள் எழுதியுள்ளார். பொருந்திய பெருமையைக் கொண்ட வாதி கேசரி அழகிய மணவாள ஜீயரும் சில விளக்கவுரைகள் எழுதியுள்ளார்.[2]

படைப்புகள்

மேற்கோள்கள்