கண்ணிநுண் சிறுத்தாம்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கண்ணிநுண் சிறுத்தாம்பு என்பது பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வாரால் இயற்றப்பட்ட தமிழ் இலக்கியப் படைப்பாகும்.[1] [2] 12 பாசுரங்களைக் கொண்டது. மதுரகவி ஆழ்வாரின் குருவான நம்மாழ்வாரைப் பற்றி பாடும் பாடல்கள் ஆகும்.[3] இந்த பாடல்கள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் ஒரு பகுதியாகும்.[4]

பின்புலம்

கண்ணிநுண் சிறுதம்பு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் தோற்றத்துடன் தொடர்புடையது . ஒரு சமயத்தில், கும்பகோணத்தில் உள்ள ஒரு கோவிலில் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் உள்ள ஆராவமுதே பாசுரங்களை சிலர் பாடுவதை வைணவ இறையியலாளர் நாதமுனிகள் கேட்டுள்ளார். இந்தப் பாசுரங்களால் (பாடல்களால்) கவரப்பட்ட அவர், அவற்றைப் பற்றி மேலும் அறிய விரும்பினார். ஒரு பாசுரத்தில் ஆயிரத்துல் இப்பத்து அதாவது ஆயிரத்தில் ஒரு பத்து குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 990ல் பாசுரங்களை நாதமுனிகள் பற்றி கேட்ட பொழுது. 10ஐப் பாடியவர்களுக்கு எங்களுக்கு பத்து பாடல்கள் மட்டுமே தெரியும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் பாசுரத்தின் இறுதியில் குருகூர் சடகோபன் பெயர் மற்றும் இடம் குறிப்பிடப்பட்டதால், நாதமுனி குருகூருக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் நம்மாழ்வாரின் 1,000 பாசுரங்களைப் பற்றி கேட்டார். [8]

நாதமுனிகள் விரும்பும் 1,000 பாசுரங்கள் மக்களுக்குத் தெரியாது, ஆனால் மதுரகவியார் வம்சத்தில் வந்த ஒரு நபர்ருக்கு மதுரகவி ஆழ்வாரின் 11 பாசுரங்கள் (பாசுரங்கள்) மற்றும் கண்ணிநுண் சிறுதம்பு பற்றி சொன்னார்கள். நம்மாழ்வார் வாழ்ந்த தலமான திருப்புளியாழ்வார் (புளிய மரம்) இடம் சென்று. இந்த 11 பாசுரங்களையும் 12,000 முறை பாராயணம் செய்யும்படி கூறினார்கள். நாத முனிகளும் அவரது அறிவுறுத்தலின்படி செய்து, அவரது தவத்தில் மகிழ்ச்சி அடைந்த நம்மாழ்வார், தனது 1,000 பாசுரங்களை மட்டுமின்றி, அனைத்து ஆழ்வார்களின் மொத்த 4,000- பாசுரங்களையும் அவருக்கு வழங்கினார். [9]

முதல் பாசுரம்

கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்

பண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,

நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,

அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே

முதல் பாசுரம்

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

முதலாயிரம் - கே.ஆர்.கிருஷ்ணசுவாமி

"https://tamilar.wiki/index.php?title=கண்ணிநுண்_சிறுத்தாம்பு&oldid=18452" இருந்து மீள்விக்கப்பட்டது