அக்கரைப்பற்று
அக்கரைப்பற்று | |
---|---|
நகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | அம்பாறை |
பி.செ. பிரிவு | அக்கரைப்பற்று |
அக்கரைப்பற்று என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரையோரப் பிரதேசமாகும். 99.1 சதுர கிலோமீற்றர் பரப்பினை கொண்ட அக்கரைப்பற்றில், 35538 பேர் வசிக்கின்றனர் என இலங்கையின் 2003 ற்கான புள்ளிவிபர தகவல்கள் சொல்லுகின்றன. இது தமிழர்களும் முஸ்லிம்களும் வாழுகின்ற பிரதேசமாகும்.[1][2][3]
அக்கரைப்பற்றின் எல்லைக் கிராமங்களாக அட்டாளைச்சேனையும் மறு பக்கம் இறக்காமமும், இன்னொரு எல்லையாக தம்பிலுவிலும் காணப்படுகின்றன. அண்மையில் அக்கரைப்பற்று மாநகர சபையாக அக்கரைப்பற்றின் மத்திய பகுதி தரமுயர்த்தப்பட்டதோடு அதன் மேற்குப்பகுதியான குடியிருப்பு அக்கரைப்பற்று பிரதேசசபையாக மாற்றப்பட்டது. இது அக்கரைப்பற்று மேற்குப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பள்ளிக்குடியிருப்பு, ஆலிம் நகர், போன்ற சிற்றூர்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி அமைப்பாக உள்ளது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபலங்கள்
- அதா உல்லாஹ் - அமைச்சர்
- கலாநிதி தீன் முஹம்மது -கட்டார் பல்கலைக்கழகத்தின் துணைப்பீடாதிபதி
அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள்
- இராம கிருஷ்ண மிஷன் மகா வித்தியாலயம்
- அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
- அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம்
- அல்-பாயிஸா வித்தியாலயம்
- ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயம்
- அல்-முனவ்வரா கனிஷ்ட கல்லூரி
- அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலை
- அர்-ரஹிமியா பாடசாலை
- அல்-பதுர் பாடசாலை
- அல்-பாத்திமியா பாடசாலை
- அல்-ஹிதாயா பாடசாலை
- கலாநிதி பதியுதின் மஹ்மூத் பாடசாலை
- ஹிஜ்ரா பாடசாலை
- இலுக்குச்சேனை அல்-ஹுதா வித்தியாலயம்
- அல்-கமர் வித்தியாலயம்
- காதிரியா வித்தியாலயம்
- முறாவோடை ஸம்சுல் உலூம் வித்தியாலயம்
- சேகு சிக்காந்தர் ஒளியுள்ளா வித்தியாலயம்
- சேர்-ராசிக் பரீட் வித்தியாலயம்
- ஷாஹிரா வித்தியாலயம்
- அக்கரைப்பற்று ஸ்ரீ தம்மரத்ன சிங்கள வித்தியாலயம்
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
1946ம் ஆண்டு நிறுவப்பட்ட அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியானது முஸ்லிம் சமூகத்தின் முதன்மையானதொரு கல்வி வழங்குநராகும். இப்பாடசாலையானது 1992ம் வருடம் இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் தேசிய பாடசாலையாகவும் கிழக்கு மாகாணத்தின் முதலாவது தேசிய பாடசாலை யாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2000 இற்கும் அதிகமான மாணவப் பரம்பலையும் 160 இற்கும் அதிகமான ஆசிரியர்கள்,ஊழிய-உறுப்பினர்களையும் கொண்டதொரு நிறுவனமாகவே இப்பாடசாலை தொழிற்படுகின்றது.
மேற்கோள்கள்
- ↑ "Akkaraipattu urban population census". http://www.citypopulation.de/en/srilanka/cities/.
- ↑ "Akkaraipattu division population census". http://www.citypopulation.de/en/srilanka/admin/.
- ↑ Wijeratne, L (7 November 2017). "A nation energised with Gal Oya mission". http://www.dailynews.lk/2017/11/07/features/133656/nation-energised-gal-oya-mission.