இறக்காமம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இறக்காமம்
City
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்ட, சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள புராதன வரலாற்றைக் கொண்டதொரு ஊர் இறக்காமம்.

78.2 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு, 8.2 சதுர கிலோமீற்றர் நீர்ப்பரப்பு அடங்கலாக 84.3 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு முஸ்லிம்கள் 15,476, சிங்களவர்கள் 997, தமிழர்கள் 346 பேர் வசிக்கின்றனர்.[1] இதில் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 15,822 ஆகும்.

இறக்காமம் வடக்குத் திசையில் அம்பாறை நகரையும், கிழக்குப் புறமாக அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஊர்களையும், மேற்கில் நீத்தைப் பிரதேசத்தையும், மேற்குத் திசையில் ஹிங்குறான என்னும் ஊரையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது.

78.2 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் 5742 ஏக்கரில் நெல் சாகுபடியும், 2428 ஏக்கரில் கரும்பு சாகுபடியும் செய்யப்படுகின்றன. இங்கு விவசாயம் மட்டுமன்றி கூரை ஓடுகள், செங்கற்கள் மற்றும் சீமந்துக்கற்கள் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்குள்ள நன்னீர் குளங்களில் 'இறக்காமம் வில்லுக்குளம்' 15,666 ஏக்கர் நீர்ப்பரப்பைக் கொண்டதாகவும், இலங்கையில் தூய நீரைக் கொண்டுள்ள இரண்டாவது குளமாகவும் உள்ளது.[2] இறக்காமம் இலங்கையின் உலர் வலயத்தினுள் அடங்குவதால், சராசரி வெப்பநிலையாக 30°C உள்ளது. வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலம் ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் கணிசமான அளவு மழைவீழ்ச்சி கிடைக்கிறது. சராசரி மழைவீழ்ச்சி 22 mm ஆகும்.[3]

மேற்கோள்கள்

  1. இலங்கைக் குடியரசின் சனத்தொகைக் கணக்கெடுப்பு 2013, அரசாங்க அச்சகம்
  2. அரச வர்த்தமானி 29.05.2009
  3. Department of Meteorology, Srilanka
"https://tamilar.wiki/index.php?title=இறக்காமம்&oldid=38757" இருந்து மீள்விக்கப்பட்டது