விஸ்ரவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

விஸ்ரவன் (Vishrava), பிரம்மா தன் மனதால் நினைத்த போது தோன்றிய புதல்வரும், பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்தியரின் மகனும் ஆவார்.[1] விஸ்ரவ முனிவரின் முதல் மனைவியான, ரிஷி குமாரிக்கு பிறந்தவரே குபேரன் ஆவார். விஸ்ரவ முனிவருக்கும் - அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை ஆவார்.

வரலாறு

முனிவர் விஸ்ரவனின் அட்டமா சித்திகளை அறிந்த அரக்கர் குல தலைவர் சுமாலி, தன் அரக்கர் குலம் மேன்மையுற தனது மகளான கைகேசியை முனிவர் விஸ்ரவனுக்கு மணமுடித்தார். விஸ்ரவன் – கைகேசி இணையருக்கு மூவுலகிலும் வலிமையான, புகழ் பெற்ற இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை போன்ற குழந்தைகளை ஈன்றெடுத்தனர். இக்குழந்தைகள் கைகேசி மற்றும் சுமாலியின் மேற்பார்வையில் வளர்ந்தனர்.

மேற்கோள்கள்

  1. Narada said.. Mahabharata translated by Kisari Mohan Ganguli (1883 -1896), Book 2: Sabha Parva: Lokapala Sabhakhayana Parva, section:XI. p. 25 And Daksha, Prachetas, Pulaha, Marichi, the master Kasyapa, Bhrigu, Atri, and Vasistha and Gautama, and also Angiras, and Pulastya, Kraut, Prahlada, and Kardama, these Prajapatis, and Angirasa of the Atharvan Veda, the Valikhilyas, the Marichipas; Intelligence, Space, Knowledge, Air, Heat, Water, Earth, Sound, Touch, Form, Taste, Scent; Nature, and the Modes (of Nature), and the elemental and prime causes of the world,--all stay in that mansion beside the lord Brahma. And Agastya of great energy, and Markandeya, of great ascetic power, and Jamadagni and Bharadwaja, and Samvarta, and Chyavana, and exalted Durvasa, and the virtuous Rishyasringa, the illustrious 'Sanatkumara' of great ascetic merit and the preceptor in all matters affecting Yoga..."
"https://tamilar.wiki/index.php?title=விஸ்ரவன்&oldid=38479" இருந்து மீள்விக்கப்பட்டது