வா கண்ணா வா
வா கண்ணா வா | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | டி. யோகானந்த் |
தயாரிப்பு | சாந்தி நாராயணசாமி |
கதை | வியட்நாம் வீடு சுந்தரம் (உரையாடல்) |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சுஜாதா மேஜர் சுந்தரராஜன் ஜெய்கணேஷ் |
ஒளிப்பதிவு | ஜி. ஆர். நாதன் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
கலையகம் | சிவாஜி புரொடக்சன்சு |
வெளியீடு | பெப்ரவரி 6, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வா கண்ணா வா (Vaa Kanna Vaa) என்பது 1982 ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கிய இப்படத்தை சாந்தி நாராயணசாமி தயாரித்தார். படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, மேஜர் சுந்தரராஜன் ஜெய்கணேஷ் ஆகியோர் நடித்தனர். இது ரா கண்ணா ரா என்ற தெலுங்கு படத்தின் மறுஆக்கமாகும். இப்படம் 1982 பிப்ரவரி 6 அன்று வெளியானது.[1]
கதை
இளம் காதலர்களான ராமுவும் சீதாவும் எப்போதும் சண்டையிடுபவர்களாக இருக்கிறார்கள். அதே நேரத்தில் வயதான தம்பதிகளான நாயுடுவும் பாப்பாவும் ஒருவருக்கொருவர் அன்யோன்யமாக வாழ்கிறனர். ராமு தன் பணக்காரத் தந்தையின் எதிர்ப்பை மீறிய சீதாவை திருமணம் முடிக்கிறான். புதுமணத் தம்பதியர் நாயுடு மற்றும் பாப்பாவின் வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து குடிவருகின்றனர். வயதான தம்பதியினர் சீதாவை தங்கள் வளர்ப்பு மகளாக நினைக்கத் தொடங்குகிறனர். முதிய தம்பதியர் அந்த இளம் தம்பதியினரின் நலனில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.
சீதாவுக்கு குழந்தை பிறந்த பிறகு, சீதாவுக்கும் ராமுவுக்கும் இடையே பிரச்சினைகள் தோன்றுகின்றன. நாயுடுவும் பாப்பாவும் சீதா மீதும் அவள் குழந்தை மீதும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி அன்பு செலுத்தி ஆதரிக்கின்றனர். அந்தக் குழந்தையை தங்கள் சொந்தப் பேரனாக எண்ணி சீராட்டுகின்றனர். இந்நிலையில், தன் பேரனைப் பார்க்க விரும்பிய தந்தையுடன் மீண்டும் ராமு இணைகிறார். சீதாவை தன் மருமகளாக ஏற்றுக் கொண்டு குழந்தையையும் அவளையும் தங்களுடன் அழைத்துச் செல்கிறார். பேரனாக தாங்கள் கருதிய குழந்தையின் பிரிவைத் தாங்கமுடியாத நாயுடுவின் மனநிலை பாதிக்கிறது. பாப்பாவும் மனம் உடைந்து போகிறார். ஒருகட்டத்தில் நாயுடு தற்கொலை செய்து கொள்கிறார். அவர் இறந்த அதிர்ச்சியில் பாப்பாவும் இறக்கின்றார்.
நடிகர்கள்
- நாயுடுவாக சிவாஜி கணேசன்
- பாப்பாவாக சுஜாதா
- மேஜர் சுந்தரராஜன்
- ராமுவாக ஜெய் கணேஷ்
- ஏழுமலையாக நாகேஷ்
- கிருஷ்ணமூர்த்தியாக ஒய். ஜி. மகேந்திரன்
- கர்ணனாக வி. கே. ராமசாமி
- சீதாவாக வடிவுக்கரசி
பாடல்கள்
இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.[2]
பாடல் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|
"கண்ணிரண்டில் மையெழுதி கண்ணத்திலே" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 4:23 |
"புஷ்பங்கள் பால் பழங்கள்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 4:25 |
"ஒரு காலத்திலே என்னை" | டி. எம். சௌந்தரராஜன் | 4:44 |
"கண்ணா மணி வண்ணா" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, பி. எஸ். சசிரேகா | 5:54 |
"கண்ணிரண்டில் மையெழுதி கண்ணத்திலே" (சோகம்) | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 1:33 |
வரவேற்பு
கல்கியில் வெளிவந்த விமர்சனத்தில் படத்தை ஆராயக்கூடாது, ஆனால் ரசிக்க வேண்டும் என்று கூறியது.[3]
மேற்கோள்கள்
- ↑ "221-230" இம் மூலத்தில் இருந்து 19 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180319122129/http://nadigarthilagam.com/filmographyp23.htm.
- ↑ "Va Kanna Va Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan" இம் மூலத்தில் இருந்து 24 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211024165825/https://mossymart.com/product/va-kanna-va-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/.
- ↑