லட்சுமி (1953 திரைப்படம்)

லட்சுமி (Lakshmi) 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் இயக்கிய இத்திரைப்படத்தை ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி என்ற பதாகையின் கீழ் பி. கண்ணாம்பா தயாரித்தார். இப்படத்தில் ஆர். எஸ். மனோகர் நாயகனாக நடித்தார்.

லட்சுமி
சுவரிதழ்
இயக்கம்கே. பி. நாகபூசணம்
தயாரிப்புஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி
பி. கண்ணாம்பா
இசைஎம். டி. பார்த்தசாரதி
நடிப்புஆர். எஸ். மனோகர்
சந்திரபாபு
பிரெண்ட் ராமசாமி
டி. கே. ராமச்சந்திரன்
பி. கண்ணாம்பா
எம். சரோஜா
வனஜா
சி. கே. சரஸ்வதி
வெளியீடுதிசம்பர் 19, 1953
நீளம்15196 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

பாட்டுப் புத்தகத்திலிருந்த தகவல்களை கொண்ட பட்டியல்[1]

நடிகர்கள்
  • சந்திரனாக மனோகர்
  • கந்தசாமியாக எல். நாராயண ராவ்
  • நாராயணசாமியாக சி. வி. வி. பந்துலு
  • சங்கர ஐயராக பிரண்ட் ராமசாமி
  • வெங்கடேசனாக சந்திரபாபு
  • பாலுவாக டி. கே. இராமச்சந்திரன்
  • காசீமாக டி. வி. சேதுராமன்
  • மிஸ்டர் சிதம்பரமாக துரைசாமி
  • காவல் ஆய்வாளராக கோபாலாச்சாரி

நடிகைகள்

துணை நடிகர்கள்

லட்சுமி, சிறீதேவி, சாந்தகுமாரி ஜெயசிறீ, மற்றும் சேசகுமாரி.

தயாரிப்பு

இத்திரைப்படத்தைபி. கண்ணாம்பா ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி என்ற பதாகையின் கீழ் தயாரித்து நாயகியாகவும் நடித்தார். இவரது கணவரான கே. பி. நாகபூசணம் இயக்கினார்.[2] இப்படம் முழுக்க முழுக்க ஜெமினி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. அதனால் ஜெமினி நிறுவனத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் எம். டி. பார்த்தசாரதி, ஒளிப்பதிவாளர் எல்லப்பா, கலை இயக்குநர் எம். எஸ். ஜானகிராம், ஒப்பனைக் கலைஞர் சகாதேவ் ராவ் (தாதாசாகெப் பால்கேயின் உறவினர்) ஆகியோர் இப்படத்தில் பணியாற்றினர்.[2] திரைக்கதையை எஸ். டி. எஸ் .யோகியார் எழுதினார், படத்தொக்குப்பை என். கே. கோபால் மேற்கோண்டார்.[1] படத்தின் இறுதி நீளம் 15,196 அடி (4,632 மீ) ஆகும்.[3]

பாடல்கள்

பாடல்களுக்கு எம். டி. பார்த்தசாரதி இசையமைக்க, பாடல் வரிகளை எஸ். டி. எஸ். யோகியார் எழுதினார்.

பாடல்களின் பட்டியிலில் இடம்பெற்ற தகவல்கள் இப்படம் குறித்து இந்து தமிழ் திசையில் வெளியான பத்தியை அடிப்படையாக கொண்டது.[4]

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
சிங்காரமே எழிலலங்காரமே ஜோராய் சுந்தரம்மா எஸ். டி. எஸ். யோகியார்
இலவு காத்த கிளியானேன் ஜிக்கி எஸ். டி. எஸ். யோகியார்
ஆதாரம் நீயே அருள் புரிவாயே பி. லீலா எஸ். டி. எஸ். யோகியார்
நாதனை மறவேனே பி. லீலா எஸ். டி. எஸ். யோகியார்
அத்தான் போடும் பொம்மையே பி. லீலா எஸ். டி. எஸ். யோகியார்
என்னாசையை பாழாக்காதே பி. லீலா எஸ். டி. எஸ். யோகியார்

வெளியீடும் வரவேற்பும்

லட்சுமி 1953 திசம்பர் 19 இல் வெளியானது.[3] திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை கூறுகையில், "கதையின் போக்கை யூகிக்கக்கூடிய தன்மையின்" காரணமாக படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்றார்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=லட்சுமி_(1953_திரைப்படம்)&oldid=37240" இருந்து மீள்விக்கப்பட்டது