யுத்த காண்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முத்தலை கொண்ட இராவணனின் மகன் திரசிரனை அனுமார் வீழ்த்தும் காட்சி
இராம-இராவண யுத்தம்
இராமர் பட்டாபிசேகம்

யுத்த காண்டம் (Yuddha Kanda) , இதனை இலங்கை காண்டம் என்றும் அழைப்பர். இராமாயணத்தின் ஆறாவது காண்டமான யுத்த காண்டத்தில் இராமன் இலங்கையில் இராவணன் முதலான அரக்கர்களோடு நிகழ்த்திய போர் நிகழ்ச்சிகளைக் கூறும் பகுதியாதலின் இதனை யுத்த காண்டம் எனப் பெயர் பெற்றது. [1]

யுத்த காண்ட நிகழ்வுகள்

இக்காண்டத்தில் இராவணன் கடத்திச் சென்ற சீதையை, இலங்கையின் அசோகவனத்தில் கண்டு பேசியதை அனுமான் இராமரிடம் கூறுதல், சீதையை மீட்க நீலன் மற்றும் நளன் தலைமையில் வானர வீரர்கள் தனுஷ்கோடி முதல் இலங்கை வரை கடற்பாலம் அமைத்தல், இராவணனின் தம்பி வீடணன் இராமரிடம் அடைக்கலம் அடைதல், சீதையை விட்டுவிடுமாறு இராமர் அங்கதனை இராவணனிடம் தூதனுப்புதல், இராமரின் கோரிக்கையை மறுத்த இராவணனின் படைகளுடன் சுக்கிரீவன், அங்கதன் அனுமான், ஜாம்பவான், நீலன் மற்றும் நளன் தலைமையிலான வானரங்கள் மற்றும் இராம, இலக்குமணர்கள் போரிடுதல், போரில் இராவணனின் மகன்களில் இந்திரஜித் தவிர அதிகாயன், பிரகஸ்தன், திரிசிரன், நராந்தகன் - தேவாந்தகன் முதலிய மகன்கள், தம்பி கும்பகர்ணன் மற்றும் பெரும்பாலான படைத்தலைவர்கள் மடிதல், இந்திரஜித்தின் நாகாஸ்திரத்திற்கு இலக்குமணன் பலியாகும் நிலையில், ஜாம்பவான் ஆலோசனையின் படி, மேரு மலையில் உள்ள சிரஞ்சீவினி மூலிகைக் குன்றைப் பெயர்த்தெடுத்து வருதல், சிரஞ்சீவினி மூலிகைக் காற்றால் இலக்குமணனும், இறந்த ஆயிரக்கணக்கான வானரர்களும் உயிர்தெழுதல், பின்னர் நடந்த கடுமையான போரில் இலக்குமணன் இந்திரஜித்தை கொல்லுதல், இறுதியில் இராமர் இராவணனைக் கொன்று போரை முடித்து வைத்தல், வீடணனுக்கு இலங்கையின் மன்னராக இராமர் முடி சூட்டுதல், இராமரின் ஆணையின் படி, இலக்குமணன் தீ மூட்ட, சீதை தீயில் பாய்ந்து, தான் கற்புள்ளவள் என்பதை உறுதி செய்தல், பின்னர் இராமர், சீதை, இலக்குமணன் முதலானோர், வீடணன் மற்றும் அனுமான் உள்ளிட்ட வானரக் கூட்டத்துடன் புட்பக விமானத்தில் ஏறி அயோத்தி வந்தடைதல், அயோத்தியில் இராமருக்கு வசிட்டர் பட்டாபிசேகம் செய்து வைத்தல் போன்ற விவரங்கள் யுத்த காண்டத்தில் விவரிக்கப்படுகிறது. [2] அன்றிலிருந்து இராமராச்சியம் தொடங்கி ஆயிரம் ஆண்டுகள் இராமர் நன்னெறிகளுடன் அயோத்தியை ஆண்டார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=யுத்த_காண்டம்&oldid=38606" இருந்து மீள்விக்கப்பட்டது