மால்யவான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மால்யவான் (Malyaban or Malyavan), இலங்கையின் அரக்கர் குல வேந்தன் இராவணின் தாய்வழி தாத்தா சுமாலியின் மூத்த சகோதரும், மரியாதைக்குரிய தலைமை அமைச்சரும் ஆவார். [1]

சுகேது என்கின்றவருக்குப்பிறந்த மூவரில் மூத்தவன் மால்யவான். இளையவர்கள் சுமாலி (இராவணனின் தாய்வழித் தாத்தா) மற்றும் மாலி ஆவர். இவர்கள் இலங்கையை ஆண்ட போது, குபேரன் இவர்களிடமிருந்து இலங்கையைப் பறித்தான்.

இராமாயணத்தில்

இராமருடன் போரிடாது, அசோக வனச் சீதையை விடுதலைச் செய்ய இராவணனுக்கு அறிவுரை வழங்கியவர் மால்யவான். [2]

இராம - இராவணப் போரில், இராவணன் மடிந்த பின், இலங்கை வேந்தனாக பதவியேற்ற வீடணனின் தலைமை அமைச்சராக தொடர்ந்தவர் மால்யவான்.

குடும்பம்

சுகேது என்ற அரக்கருக்கு பிறந்த மூவரில் மூத்தவன் மால்யவான். இளையவர்கள் சுமாலி மற்றும் மாலி ஆவர். மால்யவானின் மனைவி சுந்தரி. மால்யவான் - சுந்தரி இணையரின் எட்டு குழந்தைகள் முறையே: வஜ்ஜிர முஷ்டி, விருபாக்சன், துர்முகன், சுப்தகன், யாக்கியகோப், மத், உன்மத்தன் மற்றும் பெண் குழந்தை அனலா. ஆவார். [3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=மால்யவான்&oldid=38442" இருந்து மீள்விக்கப்பட்டது