தண்டராம்பட்டு வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தண்டராம்பட்டு வட்டம் , தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தண்டராம்பட்டு நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 3 உள்வட்டங்களும், 63 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.


இது செங்கம் வட்டத்தில் இருந்து 2013 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது.


உள்வட்டங்கள்

  1. தண்டராம்பட்டு
  2. தானிப்பாடி
  3. பெருங்களத்தூர்


இவ்வட்டத்தில் தானிப்பாடி அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்டதாக உள்ளது.


சுமார் 15 கி.மீ தொலைவில் சாத்தனூர் அணை உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 179,553 ஆகும். அதில் 90,128 ஆண்களும், 89,425 பெண்களும் உள்ளனர். 41,852 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 66.83% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 992 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22506 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 920 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 41,937 மற்றும் 17,077 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.73% , இசுலாமியர்கள் 4.15%, கிறித்தவர்கள் 4.02%%, சமணர்கள் 0..01% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தண்டராம்பட்டு_வட்டம்&oldid=83971" இருந்து மீள்விக்கப்பட்டது