சின்னபுள்ள
சின்னபுள்ள | |
---|---|
இயக்கம் | கே. பாஸ்கரன் |
தயாரிப்பு | சின்னி ஜெயந்த் |
கதை | கே. பாஸ்கரன் |
இசை | ஆதித்தியன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. ஆர். ராம்சிங் |
படத்தொகுப்பு | பீட்டர் பாபியா |
கலையகம் | அஷ்டலட்சுமி கிரியேட்டர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 16, 1994 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சின்னபுள்ள 1994 ஆம் ஆண்டு சின்னி ஜெயந்த்[1] மற்றும் ரேவதி நடிப்பில், கே.பாஸ்கரன் இயக்கத்தில், ஆதித்யன் இசையில் வெளியான தமிழ் திரைப்படம். 1994 ஆம் ஆண்டு தமிழகத்திலிருந்து தேசிய விருதுக்குப் பரிந்துரை செய்த 6 படங்களில் இப்படமும் ஒன்று[2][3][4][5][6][6].
கதைச்சுருக்கம்
பணக்காரத் தம்பதிகளின் (விஜயகுமார் மற்றும் சத்யப்ரியா) ஒரே மகளான வள்ளியம்மை (ரேவதி) கல்லூரியில் படிக்கிறாள். கல்லூரி விடுமுறையில் தன் தந்தையின் சொந்த கிராமத்திற்குச் செல்ல விரும்புகிறாள். கிராமத்தில் தன் அத்தை அஞ்சலை (வடிவுக்கரசி) வீட்டில் தங்குகிறாள். அஞ்சலையின் மகன் வடிவேலு (சின்னி ஜெயந்த்) மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி. வள்ளியம்மையுடன் பழகும் வடிவேலு அவளைக் காதலிக்கிறான். வடிவேலுவின் நண்பன் சுப்பிரமணி (தலைவாசல் விஜய்).
ஒரு நாள் வேலை நிமித்தமாக அஞ்சலை வெளியூர் சென்றுவிடுவதால் வடிவேலுவும் வள்ளியம்மையும் வீட்டில் தனித்திருக்கின்றனர். சில நாட்கள் கழித்து வள்ளியம்மை கர்ப்பமாக இருப்பதற்கான அறிகுறிகளை உணரத் தொடங்குகிறாள். வடிவேலுவின் மீது சந்தேகம் கொள்ளும் அவள் உடனே அங்கிருந்து தன் வீட்டுக்கு வருகிறாள். அவளது பெற்றோர் வள்ளியம்மையை மதனுக்குத் (ரமேஷ் அரவிந்த்) திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். அந்தத் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் வள்ளியம்மை தான் கர்ப்பமாக இருக்கும் உண்மையைத் தன் பெற்றோர்களிடம் கூறி, அதற்கு வடிவேலுவே காரணம் என்று கூறுகிறாள்.
இதையறிந்து அதிர்ச்சியடையும் அஞ்சலை கோபம்கொண்டு வடிவேலுவை அடிக்கிறாள். வடிவேலு தான் தவறு செய்யவில்லை என்று அஞ்சலையிடம் மன்றாடுகிறான். அவனை யாரும் நம்பாததால் தற்கொலை செய்துகொள்கிறான். வள்ளியம்மையின் கர்ப்பத்திற்குக் காரணம் யார்? அவள் என்ன முடிவெடுத்தாள்? என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- சின்னி ஜெயந்த் - வடிவேலு
- ரேவதி - வள்ளியம்மை
- ரமேஷ் அரவிந்த் - மதன்
- தலைவாசல் விஜய் - சுப்பிரமணி
- விஜயகுமார் - வள்ளியம்மையின் தந்தை
- வடிவுக்கரசி - அஞ்சலை
- வெண்ணிற ஆடை மூர்த்தி - கந்தன்
- சத்யப்ரியா - வள்ளியம்மையின் தாய்
- அனுஜா
- ராம சேகர் - உழுவை
- மோகன் ராமன் - குப்புலிங்கம்
- மேனேஜர் சீனு
- கிங்காங்
- கனல் கண்ணன்
இசை
படத்தின் இசையமைப்பாளர் ஆதித்யன். பாடலாசிரியர் பிறைசூடன்.
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | பாடு பாடு | சுவர்ணலதா | 4:30 |
2 | சரிதானா | சின்னி ஜெயந்த் | 3:42 |
3 | பச்சை நெல்லு | சுனந்தா, சின்னி ஜெயந்த் | 4:35 |
4 | முகம்தெரியா முகவரியா | சுஜாதா மோகன் | 4:02 |
5 | அம்மாடி ஆத்தாடி | பி. ஜெயச்சந்திரன் | 4:00 |
மேற்கோள்கள்
- ↑ "சின்னி ஜெயந்த் கதாப்பாத்திரம்". https://www.indiaglitz.com/kaanal-neer-tamil-movie-review-9009.html.
- ↑ "சின்னபுள்ள". http://spicyonion.com/movie/chinnapulla/.
- ↑ "சின்னபுள்ள" இம் மூலத்தில் இருந்து 2010-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100228165238/http://www.jointscene.com/movies/Kollywood/Chinnapulla/684.
- ↑ "சின்னபுள்ள" இம் மூலத்தில் இருந்து 2004-08-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040812110752/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=1844.
- ↑ "சின்னபுள்ள" இம் மூலத்தில் இருந்து 2013-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130822174134/http://chinnejayanth.com/awards.html.
- ↑ 6.0 6.1 "சின்னபுள்ள". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/showbitz/article3433986.ece.