கீழ்பெண்ணாத்தூர் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கீழ்பெண்ணாத்தூர் வட்டம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] திருவண்ணாமலை மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கீழ்பெண்ணாத்தூர் வருவாய் வட்டம், திருவண்ணாமலை வட்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களைக் கொண்டு 11வது வட்டமாக 2015ல் புதிதாக நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் கீழ்பெண்ணாத்தூர் ஆகும். [2] கீழ்பெண்ணாத்தூர் வட்டம் 77 வருவாய் கிராமங்கள் கொண்டது.[3]

இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கீழ்பெண்ணாத்தூர் ஊரில் உள்ளது. இவ்வட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி) உள்ளது.

வேட்டவலம் பேரூராட்சி இவ்வட்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட ஊராகும்.

இந்த வட்டத்தில் 3 உள்வட்டங்கள் உள்ளன.

அமைவிடம்

கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தின் வடக்கில் சேத்துப்பட்டு வட்டம், கிழக்கில் விழுப்புரம் மாவட்டம், தெற்கில் தர்மபுரி மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களும், மேற்கில் திருவண்ணாமல வட்டமும் எல்லைகளாக உள்ளது.

மாவட்டத் தலைமையிடமான திருவண்ணாமலைக்கு கிழக்கே 20 கிமீ தொலைவில் கீழ்பெண்ணாத்தூர் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 1,69,757 ஆகும். அதில் 83,878 ஆண்களும், 85,879 பெண்களும் உள்ளனர் 43566 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [[1]]

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்ள்