கற்பகம் வந்தாச்சு
கற்பகம் வந்தாச்சு | |
---|---|
இயக்கம் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
தயாரிப்பு | எஸ். சியாமளா |
கதை | கோமல் சுவாமிநாதன் (வசனம்) |
திரைக்கதை | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஆர். ஹச். அசோக் |
படத்தொகுப்பு | வி. சக்ரபாணி |
கலையகம் | சியாமளா புரொடக்சன்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 15, 1993 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கற்பகம் வந்தாச்சு (Karpagam Vanthachu) 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் மற்றும் ராதிகா நடிப்பில், சங்கர் கணேஷ் இசையில், ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், மேஜர் சுந்தர்ராஜன் மனைவி எஸ். சியாமளா தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம். இப்படம் கோமல் சுவாமிநாதன் எழுதிய மேடை நாடகமான டெல்லி மாமியார் என்பதன் தழுவல் ஆகும். இப்படம் தெலுங்கில் பெஜவாடா ரௌடி என்று மொழிமாற்றப்பட்டு வெளியானது[1][2][3][4].
கதைச்சுருக்கம்
சக்திவேல் (அர்ஜுன்) ஒரு ஆதரவற்ற ஏழை. ரிக்சா ஓட்டும் தொழில் செய்து பிழைக்கிறான். தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களைக் கண்டு கோபப்பட்டு சண்டை போடும் குணமுடையவன். கற்பகமும் (ராதிகா) அவனும் காதலர்கள்.
ராஜா (கவுதம் சுந்தர்ராஜன்) மற்றும் சாரதி (ஒய். ஜி. மகேந்திரன்) இருவரும் சகோதரர்கள். சாரதி தன் மனைவி சரசுவின் (சூர்யா) சொல்லைத் தட்டாதவன். ராஜா திருமணமாகாத பிரம்மச்சாரி.
ராஜாவும் ராதாவும் (வித்யாஸ்ரீ) காதலர்கள். ராதா ஏழை வீட்டுப்பெண். ஆனால் தைரியமானவள். அவளுடைய தந்தையும் அண்ணனும் பொறுப்பற்றவர்கள். இவர்களின் திருமணத்திற்கு சாரதி சம்மதிக்கிறான். ஆனால் சரசுவின் சம்மதத்தைப் பெற சரசுவிடம் ராதாவை பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாக நடிக்கச் சொல்கிறார்கள். சரசு திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். ராஜா-ராதா திருமணம் நடக்கிறது.
திருமணத்திற்குப் பிறகு சரசுவிற்கும் ராதாவிற்கு அடிக்கடி சண்டை நடக்கிறது. டெல்லியிலிருந்து அவர்கள் வீட்டிற்கு வரும் உறவினர் மயில்சாமி (எஸ். எஸ். சந்திரன்) இவர்களுக்கு புத்திபுகட்ட ஒரு திட்டம் தீட்டுகிறார். கற்பகத்தை தன் மனைவியாக நடிக்கச்சொல்லி வீட்டுக்கு அழைத்துவருகிறார். கற்பகத்தின் சகோதரனாக சக்திவேலும் வருகிறான். ராதா - சரசு இருவரையும் கற்பகம் எப்படித் திருத்தினாள் என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- அர்ஜுன் - சக்திவேல்
- ராதிகா - கற்பகம்
- வித்யாஸ்ரீ - ராதா
- எஸ். எஸ். சந்திரன் - மயில்சாமி
- வினு சக்ரவர்த்தி - பசுபதி
- வெண்ணிற ஆடை மூர்த்தி - திருச்சிற்றம்பலம்
- ஒய். ஜி. மகேந்திரன் - சாரதி
- சார்லி - மாதவன்
- கவுதம் சுந்தர்ராஜன் - ராஜா
- சூர்யா - சரசு
- நாஞ்சில் நளினி - தங்கம்மா
- கோகிலா - கோகிலா
- தளபதி தினேஷ்
இசை
இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, முத்துலிங்கம், நா. காமராசன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் இயற்றினர்.
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | காலநீளம் |
---|---|---|---|
1 | நான் படிச்ச பள்ளிக்கூடம் | மலேசியா வாசுதேவன் | 3:42 |
2 | பதநிச | சுஜா | 2:47 |
3 | பொண்ணு நினைச்சால் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோ, சுவர்ணலதா, சுஜா | 4:14 |
4 | கற்பகம் வந்தாச்சு | குழு | 1:00 |
5 | நான்தாண்டி | சுவர்ணலதா | 3:51 |
6 | நாலு பக்கம் பேய்கள் | மனோ | 4:21 |
7 | முருகா வேல் முருகா | மனோ, சுவர்ணலதா | 3:41 |
மேற்கோள்கள்
- ↑ "திரைப்படம்". http://spicyonion.com/movie/karpagam-vandhachu/.
- ↑ "திரைப்படம்" இம் மூலத்தில் இருந்து 2016-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161104205524/http://www.gomolo.com/karpagam-vandhachu-movie/11714.
- ↑ "திரைப்படம்" இம் மூலத்தில் இருந்து 2004-11-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041129071936/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=1761.
- ↑ "திரைப்படம்" இம் மூலத்தில் இருந்து 2010-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100203010251/http://jointscene.com/movies/Kollywood/Karpagam_Vandhachu_1993/9145.
- 1993 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- இந்திய நகைச்சுவைத் திரைப்படங்கள்
- ராதிகா நடித்த திரைப்படங்கள்
- அர்ஜூன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்