ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவார வைப்புத்தலம் பாடல் பெற்ற
ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):எயினனூர்
பெயர்:ஏனநல்லூர் பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:ஏனநல்லூர், (மருதாந்தநல்லூர் அருகில்)
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பிரம்மபுரீசுவரர்
தாயார்:கற்பகாம்பாள்
பாடல்
பாடல் வகை:தேவார வைப்புத்தலம்

பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏனநல்லூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.[1] இத் தலம் ஒரு தேவார வைப்பு தலம். [கு 1]


தற்போது ஏனநல்லூர் என்றழைக்கப்படும் எயினனூர், ஏனாதி நாத நாயனார் பிறந்த தலம்.[1]

அமைவிடம்

கருக்குடி சற்குணலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மருதாந்த நல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது இத் தலம். கும்பகோணம் -மன்னார்குடி சாலையில் கருவளர்ச்சேரி பிரிவில் மருதாந்தநல்லூரைத் தாண்டியும் நாச்சியார் கோயிலுக்கு மேற்கில் மூன்று கி.மீ தொலைவில் திருமலைராயன் ஆற்று வடகரையில் உள்ளது. [1]

குறிப்புகள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், (தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) நூலில், வைப்புத்தலங்கள் பட்டியலில் இவ்வூரைப் பற்றிய பதிவோ, இக்கோயிலைப் பற்றிய கட்டுரையோ காணப்பெறவில்லை. பிற சான்றுகளில் தேடும்போது இவ்வாறாக வைப்புத்தலம் உள்ளதாகக் குறிப்பு காணப்பெறவில்லை. அவ்வாறு கிடைப்பின் சேர்க்கப்படும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 178

வெளியிணைப்புகள்