என் பொண்டாட்டி நல்லவ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

என் பொண்டாட்டி நல்லவ (En Pondatti Nallava) என்பது செந்தில்நாதன் இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். நெப்போலியன், குஷ்பூ, செந்தில், வடிவேலு (நடிகர்), சனகராஜ், மஹிந்திரா, கோவை சரளா மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ். கிரி தயாரிப்பில், தேவா இசை அமைப்பில் 14 ஏப்ரல் 1995 ஆம் தேதி வெளியானது.[1][2][3]

நடிகர்கள்

நெப்போலியன், குஷ்பூ, செந்தில், வடிவேலு, ஜனகராஜ், மஹிந்திரா, கோவை சரளா, சத்யப்ரியா, ஆர்த்தி, அஜய் ரத்னம், கே. எஸ். ஜெயலட்சுமி, ரவிராஜ், மகாநதி ஷங்கர், அசோகன், ஷண்முகசுந்தரம், கிங் காங், டைபிஸ்ட் கோபு, வெள்ளை சுப்பையா, குள்ளமணி, கருப்பு சுப்பையா, திடீர் கன்னையா, மஹேந்திரன்.

கதைச்சுருக்கம்

ராதிகா (குஷ்பூ), ரேஷன் கடை ஒன்றை மிகவும் நேர்மையாக நடத்தி வருகிறார். பின்னர் ஒரு கிராமத்திற்கு பணி மாற்றம் செய்யப்படுகிறார். 5 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்து ஊரினுள் ராஜப்பா (நெப்போலியன்) வரும்வரை அனைத்தும் நன்றாக நடந்தது. கள்ள சாராயம் விற்பதில் பெயர்போன ராஜாப்பாவை மீண்டும் சிறைக்கு அனுப்ப நினைத்தார் கிராம போலீஸ் அதிகாரி (அஜய் ரத்னம்).

அவ்வாறாக ஒரு நாள், ராதிகாவுடன் பாலியல் வன்புணர்வு கொள்கிறான் ராஜப்பா. ஆனால், ராஜப்பவை நல்லவனாக மாற்றி காட்டுவதாக சவால் விடுகிறாள் ராதிகா. பின்னர், ராதிகா கர்ப்பமாகி, அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ராஜப்பாவின் தாயின் பெயர் சிவகாமி. அந்த பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறாள் ராதிகா. அதை கண்டு அதிர்ந்து போன ராஜப்பாவிற்கு கடந்த காலத்தை கூறுகிறாள் ராதிகா.

ராஜப்பாவை நல்லவனாக மாற்ற முடிந்ததா என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

ஆறு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1995 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் இசை அமைப்பாளர் தேவா ஆவார். புலமைப்பித்தன் மற்றும் முத்துலிங்கம் பாடல் ஆசிரியர்கள் ஆவர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=என்_பொண்டாட்டி_நல்லவ&oldid=31383" இருந்து மீள்விக்கப்பட்டது