எட்டாம்படை
இக்கட்டுரையின் தலைப்பு தமிழர்விக்கியின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எட்டாம்படை திருவல்லிக்கேணி திருமுருகன்
இந்த ஆலயம் பழமையான திருகோவிலாகும். இக்கோவிலுள்ள மயில் மேல் அமர்ந்த முருகன் உள்ள கல்வெட்டு சென்னையில் கந்தசுவாமி கோவில், திருவல்லிக்கேணி முருகன் கோவில் மற்றும் திருபோரூர் முருகன் கோவிலில் மட்டுமே அமைந்துள்ளது.சென்னையில் இருந்து திருபோரூருக்குக் காவடி எடுத்து செல்லும் பக்தர்கள் இந்த முருகன் கோவிலில் தங்கியிருந்து செல்லும் அன்ன சத்திரமாக விளங்கி வந்தது.
திருவல்லிக்கேணி திருமுருகனடியர்கள்
இந்த சன்னிதானம் அமைந்துள்ள நிலத்தை திருமதி. பச்சையம்மாள் நிலக்கொடையாக அளித்துள்ளார்கள். பரம்பரை தர்மகர்த்தாவாக தற்சமயம் திரு. கே. ச. கதிர்வேல் பிள்ளை, திரு. கே. சுப்பிரமணியம் அவர்கள் உள்ளார்கள். இந்த திருக்கோவிலை 1978 ஆம் ஆண்டு உழவாரப்பணி செய்ய அன்பர்களால் திருவல்லிக்கேணி திருமுருகனடியர்கள் என்ற அமைப்பினை தொடங்கி அலையை வளர்ச்சிக்காக பஜனஷ்வரா பக்தி பாடல்கள் என்ற இசைக்குழுவை தொடங்கி அதன்மூலம் வரும் தொகையை திருகோவில் வளர்ச்சிக்காக பயன்படுத்தினர்.
பங்குனி உத்திர திருவிழா
மேலும் பகுதி வாழ் பெரியோர்களின் நல்லாசியுடன் 1985 ஆம் வருடம் முருகனுக்கு வேல், காவடி, மற்றும் பால்குடம் எடுக்கும் திருவிழாவாக பங்குனி உத்திர திருவிழாவாக உருவானது. 1993 ஆம் ஆண்டு திருச்சபையாக பதிவு செய்யப்பட்டு 2002 ஆம் ஆண்டு “எட்டாம்படை வீடு திருமுருகனடியார்கள் இறைபணி சங்கம்“ இருசப்ப தெரு சென்னை-5. என்ற விலாசத்தில் இயங்கி வருகிறது .
வாஸ்து முறையில் அமைந்த திருக்கோவில்
இந்த திருவல்லிக்கேணி திருமுருகன் மேற்கு முகமாக வள்ளி தெய்வானையும் நின்ற திருக்கோலம். ஈசான மூலையில் கும்பேஸ்வரரும் அக்னி மூலையில் மங்களாம்பிகையும் வாயு மூலையில் நவக்ரஹ சந்நிதியும் நைருதியில் அரச மரமும் வாஸ்து முறையில் அமைந்த திருக்கோவில்.
எட்டாம்படை வீடு
சந்நிதானத்தில் சப்த மாதா ஏழு கன்னியர்கள் , தெற்கு முகமாகத் தக்ஷ்ணாமூர்த்தியும் , வடக்கு முகமாக ஸ்ரீ கல்யாண கனக துர்கையும் அமைந்துள்ள திருக்கோவிலாகும். இந்த திருக்கோவிலை அன்பர்கள் எட்டாம்படை வீடாக அழைத்து வருகிறார்கள். ஆறுபடை முருகனையும், ஏழாம் படையும் மருத முருகனையும் தரிசனம் செய்யும் ஆன்ம திருப்தி இந்த எட்டாம்படை முருகனை வணங்கும்போது இறையுணர்வு ஏற்படுவதாகப் பக்தர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஆலயத்தின் சிறப்பு
மேலும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் திருமணமாகாத கன்னியர்க்குத் திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் ஏற்படுகிறது. எண்ணியது எல்லாம் இனிதே இந்த முருகன் நிறைவேற்றி வைப்பதினால், சஷ்டி திருவிழாவில் , பங்குனி உத்திர திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர் .
நடை திறக்கும் நேரம்
காலை நடை திறக்கும் நேரம் அதிகாலை 6 மணி நடை மூடும் நேரம் பகல் 12 மணி
மாலை நடை திறக்கும் நேரம் மாலை 4.30 மணி நடை மூடும் நேரம் இரவு 9 மணி
அறுபடை வீடுகள்
- திருப்பரங்குன்றம் - சூரபத்மனைப் போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
- திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
- பழநி - மாங்கனிக்காகத் தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
- பழமுதிர்சோலை - ஔவைக்குக் பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.
வெளி இணைப்புகள்
- மலேசியா பத்துமலைக் குகை முருகன் கோயில் பரணிடப்பட்டது 2010-03-29 at the வந்தவழி இயந்திரம்
- நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படை பரணிடப்பட்டது 2008-05-02 at the வந்தவழி இயந்திரம்
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்- கட்டுரை பரணிடப்பட்டது 2010-03-29 at the வந்தவழி இயந்திரம்
- முருகனின் அறுபடை வீடுகள் பரணிடப்பட்டது 2010-08-03 at the வந்தவழி இயந்திரம்
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?-தகவல்கள் பரணிடப்பட்டது 2009-03-01 at the வந்தவழி இயந்திரம்
- கீற்று இதழில் மாமல்லை அருகில் சங்க கால முருகன் கோவில் கண்டுபிடிப்பு பற்றிய கட்டுரை பரணிடப்பட்டது 2007-01-05 at the வந்தவழி இயந்திரம்
- முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?-தகவல்கள் பரணிடப்பட்டது 2010-03-29 at the வந்தவழி இயந்திரம்