ஊர்மிளா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஊர்மிளா இராமாயண காவிய நாயகி சீதையின் தங்கை. மிதிலை அரசன் சனகனின் இரண்டாவது மகள். இவளை இராமனின் தம்பி இலக்குமணன் மணமுடித்தான். இவர்களுடைய மகன்கள் அங்கதனும், சந்திரகேதுவும் ஆவர்.[1]

மேலும் ராமனைப் பிரிந்து சீதை அசோகவனத்தில் அடைந்த துன்பங்களை ஊர்மிளா தனது கணவனைப் பிரிந்து அதே 14 வருடங்கள் அயோத்தி அரண்மனையிலேயே உணவும் உறக்கமும் இன்றி அனுபவித்தார் என்று ராமாயணத்தில் ஒரு பாகத்தில் கூறப்பட்டுள்ளது. [2]

மேலும் இலட்சுமணன் தனது சகோதரன் ராமனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தது போல ஊர்மிளா தனது கணவனுக்காக தனது வாழ்வை தியாகம் செய்தாள். எதையும் எதிர்பாராமல் வாழும் குணத்தில் தனித்துவம் பெற்றவள் ஊர்மிளா.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஊர்மிளா&oldid=38370" இருந்து மீள்விக்கப்பட்டது