இராகு (நவக்கிரகம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இராகு
படிமம்:BritishmuseumRahu.JPG
அதிபதிவடக்கு (சந்திர முனை)
வகைநவக்கிரகம், அசுரன்
துணைகாராளி

இராகு (Audio file "Ta-இராகு.ogg" not found) (படிமம்:Ascending node (fixed width).svg), அசுரர்களும், தேவர்களும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு திருபாற்கடலை கடையும் போது, அமிர்தம் வெளிப்பட்டது. அதனை திருமால், மோகினி அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்து ஒரு அசுரன் அமிர்தத்தை பருகியதை அறிந்த சூரிய-சந்திரர்கள், இவ்விடயத்தை திருமாலிடம் கூற, திருமால் அமிர்த கரண்டியால் அமிர்தம் குடித்த அசுரனின் தலையை வெட்டியதால், அவ்வசுரனின் உடல் இரண்டாக பிளவுபட்டது.[1][2][3]

அமிர்தம் குடித்த முண்டத்துடன் கூடிய பகுதி கேதுவாகவும், தலையுடன் கூடிய பகுதி இராகுவாகவும் மாறியது.

சூரியனை விழுங்கி கிரகணம் ஏற்படுத்த முற்பட்ட வேளை வெட்டப்பட்ட அசுரனின் தலை என இந்து தொன்மவியல் குறிப்பிடுகின்றது. இராகு சித்திரங்களில் எட்டு கருப்புக் குதிரைகளால் தேரில் கொண்டுவரப்படும் உடலற்ற பாம்பு என வரையப்பட்டுள்ளது. இது நவக்கிரகங்களில் ஒன்றாகும்.

மேற்கோள்கள்

  1. Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books. p. 324. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6.
  2. "Rahu Holds Immense Significance In Vedic Astrology". AstroSapient.
  3. Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 77.
"https://tamilar.wiki/index.php?title=இராகு_(நவக்கிரகம்)&oldid=131690" இருந்து மீள்விக்கப்பட்டது