சாநகர் இந்தியா, தமிழ்நாடு, கரூர் மாவட்டம், பள்ளபட்டி பேரூராட்சியில் உள்ள முக்கியமான பகுதி ஆகும். பள்ளபட்டியின் குறிப்பிடத்தகுந்த இடங்களில் ஷாநகரும் ஒன்றாகும். [1]
கரூரிலிருந்து சுமார் 37 கி.மீ தொலைவில் பள்ளபட்டி அமைந்துள்ளது. திண்டுக்கல்லுக்கும், கரூருக்கும் இடையே உள்ள ஊர்களில் பள்ளபட்டி குறிப்பிடத்தகுந்த ஊராகும். மேலும் பள்ளபட்டி நெடுஞ்சாலை 47க்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.
ஷாநகர் ஆனது பள்ளபட்டியின் கிழக்கு விரிவாக்கப் பகுதியாகும்.[2] திண்டுக்கல் சாலையில் இப்பகுதி அமைந்துள்ளதால் மிகக்குறுகிய காலத்திலேயே இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உருவெடுத்தது.
பள்ளபட்டியில் 30,624 மக்கள் வசிக்கின்றனர்..[3]
ஷாநகரிலிருந்து தமிழகத்தின் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் மக்கள் செல்லும் வகையில் பேருந்து வசதி உள்ளது.
இப்பகுதியில் நான்கு தேசிய வங்கிகளின் கிளைகள் உள்ளன.
1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துணைமின் நிலையம் ஒன்று பள்ளபட்டியில் உள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு மின் இணைப்பைக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.
இப்பகுதியில் இரண்டு கல்வி நிறுவனங்கள் உள்ளன