ஷாநகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சாநகர் நுழைவுப்பகுதி

சாநகர் இந்தியா, தமிழ்நாடு, கரூர் மாவட்டம், பள்ளபட்டி பேரூராட்சியில் உள்ள முக்கியமான பகுதி ஆகும். பள்ளபட்டியின் குறிப்பிடத்தகுந்த இடங்களில் ஷாநகரும் ஒன்றாகும். [1]

அமைவிடம்

கரூரிலிருந்து சுமார் 37 கி.மீ தொலைவில் பள்ளபட்டி அமைந்துள்ளது. திண்டுக்கல்லுக்கும், கரூருக்கும் இடையே உள்ள ஊர்களில் பள்ளபட்டி குறிப்பிடத்தகுந்த ஊராகும். மேலும் பள்ளபட்டி நெடுஞ்சாலை 47க்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

நகர் உருவாக்கம்

ஷாநகர் திண்டுக்கல் சாலை

ஷாநகர் ஆனது பள்ளபட்டியின் கிழக்கு விரிவாக்கப் பகுதியாகும்.[2] திண்டுக்கல் சாலையில் இப்பகுதி அமைந்துள்ளதால் மிகக்குறுகிய காலத்திலேயே இப்பகுதி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உருவெடுத்தது.

மக்கள் தொகை

பள்ளபட்டியில் 30,624 மக்கள் வசிக்கின்றனர்..[3]

சிறப்பம்சங்கள்

ஷாநகரிலிருந்து தமிழகத்தின் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் மக்கள் செல்லும் வகையில் பேருந்து வசதி உள்ளது.

வங்கிகள்

இப்பகுதியில் நான்கு தேசிய வங்கிகளின் கிளைகள் உள்ளன.

  • பேங்க் ஆப் இந்தியா
  • இந்தியன் வங்கி
  • இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
  • கனரா வங்கி

துணைமின் நிலையம்

1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துணைமின் நிலையம் ஒன்று பள்ளபட்டியில் உள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு மின் இணைப்பைக் கொடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கல்வி நிலையங்கள்

இப்பகுதியில் இரண்டு கல்வி நிறுவனங்கள் உள்ளன

  1. பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளி ( இப்பள்ளியானது 1955ல் தொடங்கப்பட்ட பள்ளியாகும் )
பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளியின் முகப்புத் தோற்றம்
  1. கிரஸெண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
கிரஸெண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முகப்புத் தோற்றம்

மேற்கோள்கள்

  1. "பள்ளபட்டி பேரூராட்சி".
  2. http://www.muslimleaguetn.com/news.asp?id=2320[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "pallapatti Population Census 2011". பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2015.
"https://tamilar.wiki/index.php?title=ஷாநகர்&oldid=40325" இருந்து மீள்விக்கப்பட்டது