வேலப்பாடி
வேலப்பாடி | |
|---|---|
நகரப் பகுதி | |
வேலப்பாடி, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 12°54′11″N 79°08′30″E / 12.9031°N 79.1418°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | வேலூர் |
| ஏற்றம் | 252.51 m (828.44 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 632001 |
| புறநகர்ப் பகுதிகள் | வேலூர், சாய்நாதபுரம், தொரப்பாடி, விருப்பாட்சிபுரம் |
| மக்களவைத் தொகுதி | வேலூர் |
| சட்டமன்றத் தொகுதி | வேலூர் |
வேலப்பாடி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதியாகும்.[1] வேல மரங்கள் நிறைந்த பகுதியாய் இருந்த காரணத்தால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது.[2]
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 252.51 மீ. உயரத்தில், (12°54′11″N 79°08′30″E / 12.9031°N 79.1418°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு வேலப்பாடி அமையப் பெற்றுள்ளது.
சமயம்
இந்துக் கோயில்
வரதராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று வேலப்பாடி பகுதியில் அமைந்துள்ளது.[3] மேலும் தர்மராஜர் மற்றும் திரௌபதியம்மன் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்றும் இங்குள்ளது. இக்கோயில்களானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன.[4][5]
திருவிழா
ஆண்டுதோறும் இப்பகுதியில் மயானக் கொள்ளை என்ற திருவிழா கொண்டாடப்படுகிறது.[6]
அரசியல்
வேலப்பாடி பகுதியானது, வேலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, வேலூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]
மேற்கோள்கள்
- ↑ "Velapadi Pin Code - 632001, All Post Office Areas PIN Codes, Search vellore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-11.
- ↑ Forty Hindu Temples. Bharathi Puthakalayam.
- ↑ [1]
- ↑ "Arulmigu Varadaraja Perumal Temple, Velapadi, Vellore - 632001, Vellore District [TM001326].,-,varatharaja Perumal". hrce.tn.gov.in. Retrieved 2025-01-11.
- ↑ "Arulmigu Dharmaraja And Dhrowpathi Amman Temple, Velapadi, Vellore - 632001, Vellore District [TM001355].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-11.
- ↑ E. T. V. Bharat (2024-03-09). "மிரட்டலான வேடங்களுடன் நடைபெற்ற வேலூர் மயான கொள்ளை!". ETV Bharat News. Retrieved 2025-01-11.
- ↑ "Velapadi Locality". www.onefivenine.com. Retrieved 2025-01-11.