வே. செல்லையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வே. செல்லையா (பிறப்பு: பிப்ரவரி 27, 1944) மலேசியாவின் எழுத்தாளர்களுள் ஒருவராவார். புனிதன், வேலன், செல்லையா போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், பல சமுதாய இயக்கங்களில் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். மேலும், பல சமுதாய, இலக்கிய நிறுவனங்களில் ஈடுபாடு உள்ளவர். பெட்டாலிங் தமிழர் சங்கத்தின் அமைப்பாளர்; இரண்டாவது மலேசிய எழுத்தாளர் தேசிய மாநாட்டின் நிர்வாக அலுவலர். தமிழ் இலக்கியப் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1968 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்

  • "பிஞ்சு மனம்" (1993)
  • "புதியதோர் உலகம் செய்வோம்" (1998)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=வே._செல்லையா&oldid=6441" இருந்து மீள்விக்கப்பட்டது