வீ. கு. சந்திரசேகரன்
Jump to navigation
Jump to search
வீ. கு. சந்திரசேகரன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
வீ. கு. சந்திரசேகரன் |
---|---|
பிறந்ததிகதி | சூலை 2 1947 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
வீ. கு. சந்திரசேகரன் (பிறப்பு சூலை 2 1947) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எழுத்துறையில் இலட்சுமி மணாளன், நிலவெழிலன் முதிய புனைப் பெயர்களால் அறிமுகமாகியுள்ளார். தொழில் ரீதியாக இவர் ஒரு அச்சக உரிமையாளராவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1965 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சினிமா உலகம் பற்றி பல தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
நூல்கள்
நாவல்கள்
- "பயணம்"
- "நிறைந்த வெளியில் நீலவானம்" (1981)
- "நித்திலப் பூ" (1997)
சிறுகதைத் தொகுப்புகள்
- "நறுமணம்"
- "புதிய தலைமுறை"
- "மாதவி மயக்கம்"
கட்டுரைகள்
- "பாடிப் பறந்த குயில்"
- "சாதனைத் தலைவர் சாமிவேலு"