விவேகம் (திரைப்படம்)
விவேகம் | |
---|---|
Poster | |
இயக்கம் | சிவா |
தயாரிப்பு | டி. ஜி. தியாகராசன் (Presenter) செந்தில் தியாகராசன் அர்ஜுன்]] |
கதை | சிவா |
இசை | அனிருத் இரவிச்சந்திரன் |
நடிப்பு | அஜித்குமார் விவேக் ஒபரோய் காஜல் அகர்வால் |
ஒளிப்பதிவு | வெற்றி |
படத்தொகுப்பு | ஆண்டனி எல். ரூபன் |
கலையகம் | சத்ய ஜோதி பிலிம்ஸ் |
வெளியீடு | ஆகத்து 24, 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹130கோடி |
மொத்த வருவாய் | ₹500கோடி |
விவேகம் (Vivegam) என்பது அஜித் குமார் நடிப்பில் 2017 ஆம் ஆண்டில் வெளியாகிய ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சிவா இயக்கிய இத்திரைப்படத்தில் காஜல் அகர்வால்,விவேக் ஒபரோய்ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1][2] இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆகத்து 2 அன்று தொடங்கியது.[3]
நடிகர்கள்
தயாரிப்பு
வெற்றி இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும்,[4] ஆண்டனி எல். ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.[5] அஜித் குமாருடன் பில்லா, ஆரம்பம் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய அனு வர்த்தன் இப்படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.[6] காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இத்திரைப்படத்தில், கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்சரா ஹாசனும் கதாநாயகியாக நடிக்கிறார்.[7]
சோகப்பாடல்
இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். பாடல்கள் பட்டியல்
பாடல் | இசை | வரிகள் | பாடகர்(கள்) |
---|---|---|---|
சர்வைவா | அனிருத் ரவிச்சந்திரன் | சிவா, யோகி பி | யோகி பி, அனிருத் ரவிச்சந்திரன், மாளவிகா மனோஜ் |
தலை விடுதலை | அனிருத் ரவிச்சந்திரன் | சிவா | அனிருத் ரவிச்சந்திரன், ஹரீஷ் சுவாமிநாதன் |
காதலாட | அனிருத் ரவிச்சந்திரன் | கபிலன் வைரமுத்து | பிரதீப் குமார், ஷாஷா திருப்பதி |
ஏகே தீம் | அனிருத் ரவிச்சந்திரன் | ||
வெறியேற | அனிருத் ரவிச்சந்திரன் | சிவா | எம்.எம்.மானசீ, பூர்வி கௌடிஷ் |
காதலாட ரீப்ரைஸ் | அனிருத் ரவிச்சந்திரன் | கபிலன் வைரமுத்து | ஷாஷா திருப்பதி, நம்ரதா, பூஜா, அனிருத் ரவிச்சந்தரன் |
நெவர் எவர் கிவ் அப் | அனிருத் ரவிச்சந்திரன் | ராஜ குமாரி | ராஜ குமாரி |
வரவேற்பு
விவேகம் 2017 ஆகத்து 24 இல் உலகளவில் வெளியானது. கலவையான விமர்சனங்களை கொண்டு வணீக ரீதியாக ஒரு வெற்றி படமாகவே தெரிந்தது. பிரபல தமிழ் சினிமா விமர்சகர்களான Behindwoods இப்படத்திற்கு 2.25 மதிப்பெண் கொடுத்தது.[சான்று தேவை] யூடியூப் விமர்சனங்களில் தமிழ் டாக்கீஸ் மாறன் கொடுத்த விமர்சனம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஒரு விமர்சனம் என்பதை தாண்டி தனி மனித தாக்குதலாக பார்க்கப்பட்ட அந்த விமர்சனத்திற்கு பெருவாரியான அஜித் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் கண்டனத்தை தெரிவித்தனர்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
- ↑ "Ajith, Kajal off to Slovenia for Thala57"
- ↑ "Akshara Haasan teams up with Ajith"
- ↑ "தல 57 படப்பிடிப்பு தொடக்கம்". Archived from the original on 2016-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-08-07.
- ↑ "'Thala 57:' Sasikumar to turn baddie in Ajith's next film?" (in English). பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.
- ↑ "'Thala 57': Kajal Aggarwal to romance Ajith?" (in English). பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.
- ↑ "'Thala 57' launch: Ajith-starrer takes off, complete cast and crew yet to be revealed" (in English). பார்க்கப்பட்ட நாள் 2016-07-10.
- ↑ "Thala 57 Heroins Officially Confirmed!". gethucinema.com.