விரகனூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
விரகனூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்மதுரை
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

விரகனூர் (Viraganur) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை (தெற்கு) வட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், விரகனூர் ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இதன் அஞ்சல் சுட்டு எண் 625009 ஆகும். தொலைபேசி குறியீடு எண் +914549****** ஆகும். விரகனூர், திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

அமைவிடம்

விரகனூர், மதுரை - வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு கிழக்கே மூன்று கி.மீ. தொலைவில், இராமேஸ்வரம் சாலையில், வைகை ஆற்றின் கரையில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. வாரணாசி - கன்னியாகுமரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா) இதனருகே செல்கிறது.

அருகமைந்த குடியிருப்புகள்

அருகமைந்த கல்வி நிறுவனங்கள்

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,826 குடும்பங்களையும் கொண்ட இவ்வூரின் மக்கள்தொகை 7,121 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 87.3% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 968 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 428 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 902 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 969 மற்றும் 0 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.87%, இசுலாமியர்கள் 0.41%, கிறித்தவர்கள் 3.62%, மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.[2] இங்கு தமிழ் மற்றும் சௌராட்டிர மொழிகள் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=விரகனூர்&oldid=498750" இலிருந்து மீள்விக்கப்பட்டது