விநாயக கவசம்
Jump to navigation
Jump to search
விநாயக கவசம் என்னும் கவச நூல் 16 ஆம் நூற்றாண்டில் கச்சியப்ப முனிவரால் [1] பாடப்பட்ட விநாயக புராணத்தின் ஒரு பகுதி. இதில் ஒன்பது விருத்தப் பாடல்கள் உள்ளன.
ஆதியில் இக் கவசத்தைக் காசிப முனிவர் முத்கல முனிவருக்கு அருளியதாகவும், அதை அவர் வேறு பல முனிவர்களுக்கு அருளியதாகவும் குறிப்பிட்டுக்கொண்டு நூல் தொடர்கிறது. அந்தக் கவசமுறை வழிபாட்டு நூல், விநாயகர் காக்கவேண்டும் என வேண்டும் பகுதியாக இந்த நூலில் வருகிறது.
இந்த நூலிலுள்ள ஒரு பாடல் [2]
- வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க; வாய்ந்த சென்னி
- அளவுபடா சவுந்தர தேகம் மா தோல் சுடர் தாம் அமர்ந்து காக்க
- விளர் அர நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க; புருவம் தம்மைத்
- தளர்வு இல் மகோதரர் காக்க; தட விழிகள் பாலச்சந்திரனார் காக்க.
சிகை என்னும் தலைமயிர், தலை, வெள்ளைநிற அரன் இருக்கும் நெற்றி, புருவம், விழிகள் ஆகியவற்றைக் காக்கவேண்டும் என இந்தப் பாடல் வேண்டுகிறது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, பதிப்பு 2005
வெளியிணைப்புகள்
அடிக்குறிப்பு
- ↑ இவர் கச்சியப்ப சிவாசாரியார் அல்லாத வேறொரு புலவர்.
- ↑ எடுத்துக்காட்டாக இந்நூலின் முதல் பாடல் பொருள் உணர்ந்துகொள்ளும் வகையில் சொற்பிரிப்பு செய்யப்பட்டு இங்குத் தரப்பட்டுள்ளது.