விஜய் கேல்கர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

விஜய் எல். கேல்கர் (Vijay L. Kelkar) (பிறப்பு 15 மே 1942) ஓர் இந்தியப் பொருளாதார வல்லுநரும், கல்வியாளரும் ஆவார், இவர் இப்போது புது தில்லியில் உள்ள ஒட்டாவா, இந்தியா வளர்ச்சி அறக்கட்டளையின் கூட்டமைவுகளின் பேரவை தலவர் ஆவார். இவர் ஜவானி சமூக முன்முயர்சி அமைப்பின் தலைவரும் ஆவார். ஜவானி என்பது மராட்டிய வணிக, தொழில், வேளாண் முன்முனைவு (MCCIA)அமைப்பாகும் பூனாவில் இவர் ஆ.பி. புட்டபர்த்தி சார்ந்த சிறீசத்திய சாய் மைய அறக்கட்டளை உறுப்பினராக 2014 சனவரி 4 அன்றில் இருந்துவருகிறார்.[1] இவர் 2010 வரை நிதி ஆணையத்தின் தலைவராக இருந்தார். [2]இவர் 2010 வரை நிதி ஆணையத்தின் தலைவராக இருந்தார். இவர், முன்பு 2002 முதல் 2004 வரை நிதி அமைச்சரின் தொடக்கநிலை அறிவுரைஞராக இருந்தார். இவர் இந்தியப் பொருளியல் சீர்திருத்தத்தில் முதன்மையான பாத்திரம் வகித்துள்ளார். இதர்ௐஉ முபு இவர், 1998 முதல் 1999 வரை இந்திய அரசு, நிதித்துறை செயலராக இருந்துள்ளார். 1999 இல், இவர் ந்தியா, வஙதேசம், பூட்டான், சிறிலங்கா பன்னாட்டுப் பண நிதியத்தில்(IMF) செயல் இயக்குநராக பதவி அமர்த்தம் பெற்றார்.[3][4]

தொடக்கநிலை வாழ்க்கை

கேல்கர் பூனே பி.கே. பொறியியல்கல்லூரியில் 1963 இல் பொறியியல் இளவல் பட்டமும் அமெரிக்க மினசோட்டா பல்கலைக்கழகத்தில் 1965 இல் மூதறிவியல் பட்டமும் 1970 களில் கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதார பிாிவில் முனைவர் பட்டமும் பெற்றாா்.

தொழில்

கேல்கர் இந்தியாவின் நிர்வாக பணியாளர்கள் கல்லூரி ஐதராபாத், பொருளாதார மேம்பாடு, நிர்வாக மையம், காத்மாண்டு, நேபாளம், தெற்கு ஆசியா நிறுவனம், ஐடல்பெர்கு பல்கலைக்கழகம், செருமனி, கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி ஆகியவற்றில் கற்றுக் கொண்டார்.

அவர் இந்திய அரசிலும் அதே போல் பன்னாட்டு அமைப்புகளிலும் பல்வேறு மூத்த நிலைப் பதவிகளை வகித்துள்ளார்:

  • தலவர், இந்தியப் புள்ளியியல் நிறுவனம்
  • தலைவர், CSIR-தொழில் தனியார் குழுமம் (www.csirtech.com)
  • தலவர், தேசிய பங்கு வணிகம், இந்தியா வ-து
  • தலவர், கூட்டமைவுகளின் பேரவை, Ottawa [1]
  • தலைவர், இந்திய வளர்ச்சி அறக்கட்டளை
  • துணைத்தலைவர், பூனா பன்னாட்டு மையம்


குழுக்கள், ஆணையங்கள் தலைமை

  • .இந்தியாவில் PPP மீதான கேல்கர் குழு என்.சி.ஏ.டி. கூட்டு நிறுவனம் (90 இருக்கை தேசிய மக்கள் விமானம்)
  • மக்கள்குழுவை உருக்கும் திட்டக்குழு[5]
  • கேல்கர் அரும்பணிக்குழு. இது இந்திய சரக்கு, சேவை வரிகளைத் தீர்மானித்தது [6]

விருதுகள்

2011 ஆம் ஆண்டு சனவரியில் கேல்கருக்குப் பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

.விஜய் கேல்கர் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகளுண்டு.[7]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=விஜய்_கேல்கர்&oldid=25564" இருந்து மீள்விக்கப்பட்டது