வான் மூன்று

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வான் மூன்று
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஏ. எம். ஆர். முருகேஷ்
தயாரிப்புவினோத்குமார் சென்னியப்பன்
இசைஆர்2பிரோஸ்
நடிப்பு
ஒளிப்பதிவுசார்லசு தாமசு
படத்தொகுப்புஅஜய் மனோஜ்
வெளியீடுஆகத்து 11, 2023 (2023-08-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வான் மூன்று (Vaan Moondru) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும், இது ஏ. எம். ஆர் முருகேஷ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் டெல்லி கணேஷ், லீலா சாம்சன், வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது 11 ஆகஸ்ட் 2023 அன்று வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்

தயாரிப்பு

இத்திரைப்படத்திற்கு வான் மூன்று என்ற தலைப்பைத் தெரிவு செய்வதற்கு முன்னதாக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தொடக்கத்தில் ஆங்கிலத் தலைப்பொன்றை யோசித்து வைத்திருந்தார்கள்.[2]

வரவேற்பு

இத்திரைப்படம் 11 ஆகத்து 2023 அன்று ஒளித்தாரைத் தளம் வழியாக வெளியிடப்பட்டது. இணையவழி காணொலித் தாரையிலிருந்து வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தை ஒரு விமர்சகர் "முன்னணி நடிகர்களின் நேர்மையான நடிப்பை நம்பியிருக்கும் ஒரு பாதிப்பில்லாத நல்ல உணர்வினைத் தரும் நல்ல படம்" என்று குறிப்பிட்டுள்ளார். [3] தி டெக்கான் குரோனிக்கிளில் இருந்து ஒரு விமர்சகர் பின்வருமாறு எழுதியுள்ளார். "படம் முழுவதும், கடந்த காலம் உங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தபோதும் வாழ்க்கையைப் புதிதாகத் தொடங்க முடியும் என்ற கருத்தை இயக்குநர் ஒவ்வொருத்தருக்குள்ளும் செலுத்த முயற்சிக்கிறார்". [4] லெசர்பைட்-இன் சுபஸ்ரீ தத்தா இத்திரைப்படத்தைப் பற்றி பின்வருமாறு எழுதினார், "திரைப்படம் கதைக்களத்தைப் பயன்படுத்தி உணர்ச்சிகளைத் தூண்டுவதை விட உங்கள் உணர் திறனை அதிகம் சார்ந்துள்ளது. ஆனால், இத்திரைப்படத்தின் நடிகர்களுக்கு நன்றி, திரைப்படம் பார்க்கச் சிறந்ததாக உள்ளது". [5] ஆனந்த விகடனில் இருந்து ஒரு விமர்சகர் படத்திற்கு நடுநிலையான விமர்சனம் கொடுத்திருந்தார். [6]

மேற்கோள்கள்

  1. "The trailer of Vaan Moondru is here". Archived from the original on 5 August 2023. பார்க்கப்பட்ட நாள் 15 September 2023.
  2. "Vaan Moondru OTT release date: When and where to watch this feel-good romantic drama". Archived from the original on 27 August 2023. பார்க்கப்பட்ட நாள் 15 September 2023.
  3. "Vaan Moondru review: A decent feel-good film that relies on sincere performances". Archived from the original on 16 September 2023. பார்க்கப்பட்ட நாள் 15 September 2023.
  4. "Hope And Life Triumph In Aha's Vaan Moondru". Archived from the original on 7 September 2023. பார்க்கப்பட்ட நாள் 15 September 2023.
  5. "Vaan Moondru Review: A One-Time Watch That Relies on Your Emotional Capacity". Archived from the original on 16 September 2023. பார்க்கப்பட்ட நாள் 15 September 2023.
  6. "Vaan Moondru Review: மூன்று தலைமுறைகளின் காதல் கதைகள்! ஆனால் அதில் ஒன்றாவது ஈர்க்கிறதா?". Archived from the original on 14 August 2023. பார்க்கப்பட்ட நாள் 15 September 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வான்_மூன்று&oldid=37554" இருந்து மீள்விக்கப்பட்டது