வருக்கக் கோவை
Jump to navigation
Jump to search
வருக்கக் கோவை தமிழ் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. வைத்தியநாத தேசிகள் இயற்றிய இலக்கண விளக்கம் இதன் இலக்கணத்தைப் பின்வருமாறு கூறுகிறது:
உயிரும் மொழிமுதல் உயிர்மெயும் வருக்கத்து
அடைவில் வருபொருள் துறையில் கலித்துறை
வழுத்தும் இயல்பது வருக்கக் கோவை.
உயிரெழுத்துக்கள், உயிர் மெய்யெழுத்துக்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாட்டின் முதலில் முறையே வரும்படி பாடுவது வருக்கக் கோவை எனப்படும். பாடுபொருள் அகத்துறைப் பொருளாக இருக்கும்.
இந்த முறையில் நீதிகளைக் கூறும் நூல் வருக்கமாலை எனப்படும்.
வருக்கக் கோவை நூல்கள்
- மோரூர் பாம்பலங்காரர் வருக்கக்கோவை
- மாறன் வருக்கக் கோவை
- நெல்லை வருக்கக் கோவை
- மல்லைச் சோழீசர் வருக்கக் கோவை
- உயிர் வருக்கக் கோவை
- கபிலமலை வருக்கக் கோவை