வட மாகாண முதலமைச்சர்
Jump to navigation
Jump to search
வட மாகாண முதலமைச்சர் | |
---|---|
வட மாகாண அரசு | |
உறுப்பினர் | வட மாகாண சபை |
நியமிப்பவர் | ஜி. ஏ. சந்திரசிறி |
பதவிக் காலம் | 5 ஆண்டுகள் |
உருவாக்கம் | 1 சனவரி 2007 |
முதலாமவர் | க. வி. விக்னேஸ்வரன் |
இணையதளம் | Northern Provincial Council |
வட மாகாண முதலமைச்சர் (Chief Minister of North Eastern Province) என்பவர் மாகாண மட்டத்தில் இலங்கையின் வட மாகாணத்தில் பல்வேறு நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். வட மாகாண அரசின் நிறைவேற்று சபையின் தலைவராக ஆளுனர் உள்ளார். வட மாகாண சபையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியினால் முதலமைச்சராகப் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரை ஆளுனர் அப்பதவிக்கு நியமிப்பார்.
முதலமைச்சர்களின் பட்டியல்
இல. | பெயர் | கட்சி | பதவியில் | விலகல் | |
---|---|---|---|---|---|
எவருமில்லை | நடுவண் அரசின் நேரடி ஆட்சி | 1 சனவரி 2007 | 7 அக்டோபர் 2013 | ||
1 | க. வி. விக்னேஸ்வரன் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 7 அக்டோபர் 2013 | இன்று |
அதிகாரங்கள் தொடர்பான தீர்ப்புகள்
மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் நடுவண் அரசின் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு என்றும், அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்றும் இலங்கை உயர்நீதிமன்றம் 2014 ஆகத்து 4 இல் தீர்ப்பளித்தது. வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனுக்கு எதிராக மாகாண செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.[1]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ விஜயலட்சுமிக்கு உத்தரவிட சி.வி.க்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம், தமிழ்மிரர், ஆகத்து 4, 2014