லுன் யூ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லுன் யூ
論語
Rongo Analects 02.jpg
லுன் யூ நூலிலிருந்து ஒரு பக்கம்
நூலாசிரியர்கன்பூசியஸின் சீடர்களால்
மொழிசீன மொழி
லுன் யூ
Analects (Chinese characters).svg.png
"லுன் யூ", பண்டைய சீன எழுத்துக்களில் (மேல்), பாரம்பரிய சீன எழுத்துக்களில் (நடு), எளிய சீன எழுத்துக்களில் (கீழ்)
பண்டைய சீனம் 論語
நவீன சீனம் 论语
Hanyu PinyinLúnyǔ
Literal meaning"தேர்ந்தெடுக்கப்பட்ட கூற்றுகள்",[1] or "திருத்தப்பட்ட உரையாடல்கள்"[2]

லுன் யூ (சீனம்: 論語; பின்யின்: Lúnyǔ; பழைய சீனம்: [r]u[n] ŋ(r)aʔ; பொருள்: "தேர்ந்தெடுக்கப்பட்ட கூற்றுகள்"[1]), சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் மற்றும் அவரது சமகாலத்தவர்களால் உரைக்கப்பட்ட கூற்றுகள் மற்றும் கருத்துகளின் தொகுப்புக்களைக் கொண்டு எழுந்த ஒரு பண்டைய சீன நூலாகும். இது கன்பூசியஸின் அனலெக்டுகள் என்றும், கன்பூசியஸின் கூற்றுகள் என்றும் அறியப்படுகிறது. இது கன்பூசியஸின் சீடர்களால் தொகுக்கப்பட்டு எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. இது போரிடும் நாடுகள் காலம் என்று கருதப்படும் பொ.ஊ.மு. 475-க்கும் பொ.ஊ.மு. 221-க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது, இது ஹான் அரசமரபின் மத்திய காலகட்டத்தில் (பொ.ஊ.மு. 206 முதல் பொ.ஊ. 220 வரை) தனது தற்போதைய வடிவத்தை அடைந்தது. ஆரம்பத்தில் ஹான் அரசமரபினரால் சீனாவின் ஐந்து செவ்வியல் இலக்கியங்களின் உரையாக மட்டுமே கருதப்பட்டு வந்த லுன் யூ, அந்த அரசமரபின் இறுதியில் கன்பூசியனிசத்தின் மைய நூல்களில் ஒன்றாக வளர்ந்து விட்டது.

சாங் அரசமரபின் பிற்பகுதியில் (பொ.ஊ. 960–1279) சீனத் தத்துவப் படைப்பாக லுன் யூவின் முக்கியத்துவம் அதிகரிக்கத் துவங்கியது. நாளடைவில் ஐந்து செவ்வியல் இலக்கியங்களை விட முக்கியத்துவம் வாய்ந்த நூலாக லுன் யூ மாறியது. மேலும் இந்நூல் பண்டைய நான்கு முக்கிய சீன நூல்களுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. கடந்த 2,000 ஆண்டுகளாக சீனாவில் மிகவும் பரவலாகப் பயிலப்பட்ட நூல்களுள் ஒன்று லுன் யூ. இன்று சீன மற்றும் கிழக்கு ஆசியத் தத்துவச் சிந்தனைகளில் கணிசமான தாக்கத்தை லுன் யூ ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு நாட்டின் நலம் என்பது அந்நாட்டின் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் தலைமகனில் தொடங்கி அந்நாட்டின் கடைகோடி மக்கள் வரை அனைவரின் தார்மீக வளர்ப்பைப் பொறுத்தது என்று கன்பூசியஸ் நம்பினார். ரென் மூலம் தனிநபர்கள் அனைத்து நல்லொழுக்கங்களையும் வளர்த்துக் கொள்ள முடியும் என்றும், ரென்னை வளர்ப்பதற்கான மிக அடிப்படைத் தேவையாக பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுடனான நல்லிணக்கம் என்றும் அவர் நம்பினார். ஒருவரின் தனிப்பட்ட ஆசைகள் அடக்கப்பட வேண்டியதில்லை என்றும் மக்கள் தங்கள் ஆசைகளையும் தேவைகளையும் சடங்குகள் மற்றும் நல்லொழுக்க நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கன்பூசியஸ் போதித்தார். இதன் மூலம் மக்கள் மற்றவர்களின் மீதான தங்களது மரியாதையையும் தங்களது சமூகப் பொறுப்பினையும் நிலைநாட்ட முடியும் என்பது கன்பூசியஸின் கூற்றாகும்.

ஒரு ஆட்சியாளரின் நல்லொழுக்க உணர்வுதான் அவரது தலைமைத்துவத்திற்கான முக்கியத் தேவை என்று கன்பூசியஸ் போதித்தார். சிரத்தையும் சரியாகப் பேசும் தன்மையும் கொண்டு அனைத்துச் செயல்களிலும் நேர்மையைப் பிரதிபலிக்க வேண்டும் என்று தனது மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இவற்றையும் பார்க்க

தரவுகள்

  1. 1.0 1.1 Van Norden (2002), ப. 12.
  2. Knechtges & Shih (2010), ப. 645.

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Wikisourcepar

"https://tamilar.wiki/index.php?title=லுன்_யூ&oldid=29316" இருந்து மீள்விக்கப்பட்டது