ருத்ரா (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அசுவினி அல்லது அசுவினி நம்பியார் என்றும் அழைக்கப்படும் ருத்ரா, மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார்.[1] இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ருத்ரா. இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த கெளரவர் என்ற மலையாளத் திரைப்படத்தில் சிறீதேவி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். மணிச்சித்ரதாழ் (1993), கிழக்குச் சீமையிலே (1993), துருவம் (1993), பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு (1994), குடும்பக் கோடதி (1996) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ருத்ரா (நடிகை)
இயற்பெயர்/
அறியும் பெயர்
ருத்ரா
பிறப்புபெயர் அசுவினி நம்பியார்
பணி நடிகை,
நடனக் கலைஞர்
தேசியம் இந்தியர்

ஆரம்பகால வாழ்க்கை

அசுவினி தனது பள்ளி இறுதியாண்டு படிக்கும் போது, ஒரு மலையாளப் பத்திரிக்கைக்காக, தனது வகுப்பு தோழர்களுடன் ஆடை விளம்பரங்களில் தோன்றினார். பத்திரிகையைப் விளம்பத்தை பார்த்த இயக்குனர் பாரதிராஜா புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பளித்தார். திருமணத்திற்குப் பிறகு சிங்கப்பூர் சென்ற இவர் தற்போது சிங்கப்பூரில் தொடர் மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார்.

தொழில்

இயக்குனர் பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் ருத்ரா தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.[2] இவர் சுமார் 16 மலையாளப் திரைப்படங்களில் நடித்துள்ளார். மணிச்சித்ரதாழ் (1993) திரைப்படத்தில் அல்லி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஹிட்லர் (1997) என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவியின் சகோதரியாக நடித்துள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் இயக்குநர் மொழி கதாபாத்திரம் குறிப்பு
1991 புது நெல்லு புது நாத்து பாரதிராஜா தமிழ் மரிக்கொழுந்து
போஸ்ட் பாக்ஸ் நம்பர்:27 பி.அணில் மலையாளம் விஜி [3]
1992 தூரத்து சொந்தம் கே. எஸ். அதியமான் தமிழ் தனலெட்சுமி
ஆயுசு காலம் கமல் மலையாளம் சுஜாதா
கௌரவர் ஜோஷி மலையாளம் சிறீதேவி
1993 மணிச்சித்ரதாழ் ஃபாசில் மலையாளம் அல்லி
கிழக்குச் சீமையிலே பாரதிராஜா தமிழ் பேச்சி
பட்டர்ஃப்ளை ராஜீவ் அஞ்சல் மலையாளம் மாயாதாசு
துருவம் ஜோஷி மலையாளம் மாயா
பிடக்கோழி கூவுன்ன நூற்றாண்டு விஜி தம்பி மலையாளம் வசுந்தரா
1994

பவித்ரம்

டி.கே.ராஜீவ்குமார் மலையாளம் ரீத்தா
புதுப்பட்டி பொன்னுத்தாயி என். கே. விசுவநாதன் தமிழ் ருக்கு
முதல் பயணம் ஏ.கே.ரவிவர்மா மலையாளம் ராதா
1995

சசினாஸ்

தேஜூஸ் பெருமான் மலையாளம் ஆனந்தி
ஆண்டி மெளலி தெலுங்கு கனி
1996 மலையாள மாசம் சிங்கம் ஒன்னு நிஸ்ஸார் மலையாளம் ரேணு
குடும்ப கோடதி விஜி தம்பி மலையாளம் பௌர்ணமி நாயர்
1997 ராமன் அப்துல்லா பாலு மகேந்திரா தமிழ் ஆயிசா
பெரியதம்பி சித்ரா லெட்சுமணன் தமிழ் மீனா
ஹிட்லர் முத்யாலா சுப்பையா தெலுங்கு சாரதா
பெல்லி சேசுகுண்டாம் முத்யாலா சுப்பையா தெலுங்கு ராதிகா
நசர் ராஜேஷ் பட் ஹிந்தி பிங்கி
1999

கள்ளழகர்

பாரதி தமிழ் சைரா
போலீஸ் தெலுங்கு சுஜாதா
2000 என்னவளே ஜே. சுரேஷ் தமிழ் சீதா
2007 ஓரம் போ புஷ்கர்-காயத்ரி தமிழ் பிஜிலியின் மனைவி
2021 எழுத்தாளர் அலமேலு மங்கை ஆர்.சிவா தமிழ் அலமேலு மங்கை
ஏஞ்சல் காலனி தமிழ் சாந்தாராய்

தொலைக்காட்சித் தொடர்கள்

தமிழ்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் தொலைக்காட்சி குறிப்பு
சந்திரிகையின் கதை முத்தம்மா டெலிஃபில்ம்

செல்லம்

இயக்குனர்

ட்ரீம்ஸ்

1996

சின்ன சின்ன ஆசை: நிறங்கள்

காஞ்சனா சன் தொலைக்காட்சி
சங்கமம் டிவி12
2001

டேக் இட் ஈசி வாழ்க்கை

துர்கா சன் தொலைக்காட்சி
நிம்மதி உங்கள் சாய்ஸ் நிர்மலா சன் தொலைக்காட்சி
2002

மீரா

மீரா தூர்தர்சன்
2006 ராஜ ராஜேஸ்வரி மகேசுவரி சன் தொலைக்காட்சி
2008 கெட்டிமேளம் லெட்சுமி ஜெயா தொலைக்காட்சி
2014 நினைவுகள் மீடியாகார்ப் வசந்தம்
2017 அத்தியாயம் நந்தினி வசந்தம் தொலைக்காட்சி
மசாலா விசாலாட்சி வசந்தம் தொலைக்காட்சி
முதல் வணக்கம் மாயா வசந்தம் தொலைக்காட்சி
2019 மகராசி கோமதி சன் தொலைக்காட்சி
தர்பார் வசந்தம் தொலைக்காட்சி
மூன்றாவது கண் வசந்தம் தொலைக்காட்சி
128 சர்க்கிள் ராணி மீடியாகார்ப் சேனல் 5
2020 உயிரே சாரு சீ தமிழ்
லிங்கம் ஸ்டோர்ஸ் வசந்தம் தொலைக்காட்சி
புகைப்படம் மலர்விழி வசந்த் தொலைக்காட்சி
காலம் கங்கா வசந்தம் தொலைக்காட்சி
சுவாசமே கவுன்சிலர் வசந்தம் தொலைக்காட்சி
2021 நாம் வசந்தம் தொலைக்காட்சி
எனக்காக மலர் வசந்தம் தொலைக்காட்சி
இரண்டு டாக்டர் வசுந்தரா வசந்தம் தொலைக்காட்சி
மன்மதன் அம்பு ரூபா வசந்தம் தொலைக்காட்சி
முகவரி பானுமதி வசந்தம் தொலைக்காட்சி
பட்டாசு ப்ரடக்ஸன் ஹரிணி வசந்தம் தொலைக்காட்சி
2022 மார்ஸ் போயி சேர்ந்துட்டோம் வசந்தம் தொலைக்காட்சி
வசந்தம் முதல் பார்வை: வீழ்வேன் என்று நினைத்தாய் ராஜி சுபாஷ் வசந்தம் தொலைக்காட்சி
128 சர்க்கஸில் சீசன் 2 ராணி வசந்தம் தொலைக்காட்சி
மையம் காயத்திரி வசந்தம் தொலைக்காட்சி
கற்றது காதல் ஹன்னா வசந்தம் தொலைக்காட்சி
2023 ஆத்மான் சைலஜா மீடிகார்ப்

மலையாளம்

ஆண்டு தொடர் கதாபாத்திரம் தொலைக்காட்சி குறிப்பு
2005 மைதிலி ஆசியாநெட்

தெலுங்கு

ஆண்டு தொடர் கதாபாத்திரம் தொலைக்காட்சி குறிப்பு
அம்மகானிகி ஆந்திர பிரதேஷ் [4]
அந்தர்நேத்ரா
களங்கிதா
தொலிரோஜிலு
1998 அந்தரங்காளு பத்மினி ஈ தொலைக்காட்சி
2001 அக்கா செல்லலு ஈ தொலைக்காட்சி

மேற்கோள்கள்

  1. "ഭർത്താവും മകളും ആവശ്യപ്പെട്ടത് ഒരേ കാര്യം! മണിച്ചിത്രത്താഴിലെ അല്ലിയുടെ ഇപ്പോഴത്തെ വിശേഷങ്ങൾ ഇങ്ങനെ" (in ml). https://malayalam.samayam.com/malayalam-cinema/celebrity-news/manichitrathazhu-fame-ashwini-nambiar-s-open-talk-about-her-life/articleshow/89788995.cms. 
  2. "ഭർത്താവും മകളും ആവശ്യപ്പെട്ടത് ഒരേ കാര്യം! മണിച്ചിത്രത്താഴിലെ അല്ലിയുടെ ഇപ്പോഴത്തെ വിശേഷങ്ങൾ ഇങ്ങനെ" (in ml). https://malayalam.samayam.com/malayalam-cinema/celebrity-news/manichitrathazhu-fame-ashwini-nambiar-s-open-talk-about-her-life/articleshow/89788995.cms. 
  3. "Post Box No. 27", Google Reviews (in English), 2024-06-28, retrieved 2024-06-28
  4. "R. Narayana Murthy's 'Ammakaniki Andhra Pradesh'", 123telugu (in English), 2024-07-01, retrieved 2024-07-01
"https://tamilar.wiki/index.php?title=ருத்ரா_(நடிகை)&oldid=23325" இருந்து மீள்விக்கப்பட்டது