மைலாஞ்சி
| மைலாஞ்சி | |
|---|---|
சுவரொட்டி | |
| இயக்கம் | அஜயன்பாலா |
| தயாரிப்பு | டாக்டர் அர்ஜுணன் |
| கதை | அஜயன்பாலா |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | ஸ்ரீராம் கார்த்திக் கிரிஷா குரூப் |
| ஒளிப்பதிவு | செழியன் |
| படத்தொகுப்பு | ஏ. ஸ்ரீகர் பிரசாத் |
| கலையகம் | அஜய் அர்ஜுன் புரொடக்சன்ஸ் |
| வெளியீடு | 13 பெப்பிரவரி 2026 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மைலாஞ்சி (Mylanji) என்பது 2026 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படமாகும். அறிமுக இயக்குநர் அஜயன்பாலா எழுதி இயக்கிய இப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்சன்ஸ் என்ற பதாகையின் கீழ் டாக்டர் அர்ஜுணன் தயாரித்தார். இதில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப் ஆகியோர் நடித்துள்ளனர். படம் 2026 பெப்ரவரி 13 அன்று வெளியானது. [1]
நடிகர்கள்
- சூர்யாவாக ஸ்ரீராம் கார்த்திக்
- சாருவாக கிரிஷா குரூப்
- குலாம் அலியாக சிங்கம்புலி
- எத்திராஜாக முனீஷ்காந்த் ராமதாஸ்
- தங்கதுரை
தயாரிப்பு
இப்படத்தை அஜயன் பாலா எழுதி இயக்கினார். அஜய் அர்ஜுன் புரொடக்சன்ஸ் என்ற பதாகையின் கீழ் டாக்டர் அர்ஜுனன் படத்தைத் தயாரித்தார். [2] ஒளிப்பதிவை செழியன் மேற்கொண்டார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். [3]
வரவேற்பு
தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அபினவ் சுப்ரமணியன், "தங்களுக்குப் பரிச்சயமற்ற ஒரு சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவிக்கும் அந்த இரண்டு அப்பாவி உயிர்களின் வாயிலாக, இயக்குனர் எதை உணர்த்த வருகிறார் என்பதை நம்மால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. கதையின் அத்தளமானது மிகவும் பலவீனமாக உள்ளது." என்று கூறினார். [4] தினத்தந்தி விமர்சகர் திரைப்பட உருவாக்கத்தைப் பாராட்டினார். [5]
சினிமா விகடன் விமர்சகர் "திரையாக்கம், திரைக்கதை என எதிலும் கச்சிதமும் புதுமையும் காட்டாத இந்த 'மைலஞ்சி' அயர்ச்சியில் பார்வையாளர்களின் கண்களை மட்டும் சிவக்க வைக்கிறது." என்று எழுதியுள்ளார். [6]
மேற்கோள்கள்
- ↑ "அஜயன் பாலாவின் மைலாஞ்சி படப்பிடிப்பு நிறைவு!". Dinamani. 2023-11-14. Archived from the original on 2023-11-20. Retrieved 2026-02-17.
- ↑ "'மைலாஞ்சி' படத்தின் ட்ரெய்லர் வெளியானது". Thamilan. 2026-02-09. Retrieved 2026-02-17.
- ↑ ""மைலாஞ்சி" படத்தின் டீசர் வெளியீடு". Daily Thanthi. 2025-10-11. Archived from the original on 2025-10-11. Retrieved 2026-02-17.
- ↑ "Mylanji Movie Review: Love story built on a non-problem". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2026-02-17.
- ↑ தினத்தந்தி (2026-02-14). ""மைலாஞ்சி" படம் எப்படி இருக்கிறது?- விமர்சனம்". Daily Thanthi. Archived from the original on 2026-02-15. Retrieved 2026-02-17.
- ↑ "மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?". Vikatan. 13 February 2026.