மேல் பின் இதழ்குவி உயிர்
மேல் பின் இதழ்குவி உயிர் | |
---|---|
u | |
அ.ஒ.அ எண் | 308 |
குறியேற்றம் | |
உள்பொருள் (decimal) | u |
ஒருங்குறி (hex) | U+0075 |
X-SAMPA | u |
கிர்சென்பவும் | u |
ஒலி | |
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
மேல் பின் இதழ்குவி உயிர் அல்லது மூடிய பின் இதழ்குவி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் காணப்படும் உயிர் வகைகளுள் ஒன்று. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் இதன் குறியீடு u. இதற்கு இணையான X-SAMPA குறியீடு u. பல மொழிகளில் மேல் பின் இதழ்குவி உயிர்களை ஒலிக்கும்போது இதழ்கள் குவிந்து முன்னோக்கி நீளுகின்றன.
உறுப்பமைவு
ஒலிக்கும்போதான நாக்கின் நிலை, இதழ் அமைப்பு என்பவற்றைப் பொறுத்தே உயிர் ஒலிகள் வகை பெறுகின்றன. முக்கியமாக நாக்கின் மேல்-கீழ் நிலை, அதன் முன்-பின் நிலை, இதழின் குவிதல்-விரிதல் நிலை என்பனவே உயிர் ஒலி வேறுபாடுகளை உருவாக்குகின்றன. மேல் பின் இதழ்குவி உயிரைப் பொறுத்தவரை, பின்வரும் நிலைமைகளைக் காணலாம்.
- நாக்கு வாயின் மேற் பகுதிக்குக் கூடிய அளவு அண்மையாக இருத்தல்.
- கூடி அளவு நாக்கு பின் தள்ளி இருத்தல்.
- இதழ்கள் குவிதல்
தமிழில்
தமிழில் உ, ஊ ஆகிய இரண்டும் மேல் பின் இதழ்குவி உயிர்கள். இவற்றில் உ மேல் பின் இதழ்குவி குற்றுயிர் என்றும், ஊ மேல் பின் இதழ்குவி நெட்டுயிர் என்றும் அழைக்கப்படுகின்றன. ஒலிப் பிறப்பைப் பொறுத்தவரை உகரம், ஊகாரம் இரண்டும் ஒரே வகையினவே. ஒலிப்புக் கால அளவிலேயே இரண்டும் வேறுபடுகின்றன. குற்றுயிரை ஒலிக்கும்போது நாக்கு சற்று நெகிழ்வு உடையதாகவும், நெட்டுயிரை ஒலிக்கும்போது சற்று இறுக்கமாகவும் இருக்கும்.