மேல் நடு இதழ்குவி உயிர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மேல் நடு இதழ்குவி உயிர்
ʉ
ü
அ.ஒ.அ எண்318
குறியேற்றம்
உள்பொருள் (decimal)ʉ
ஒருங்குறி (hex)U+0289
கிர்சென்பவும்u"
ஒலி

 

மேல் நடு இதழ்குவி உயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் உயிரொலி வகைகளுள் ஒன்று. இதை, உயர் நடு இதழ்குவி உயிர், மூடிய நடு இதழ்குவி உயிர் ஆகிய பெயர்களாலும் அழைப்பது உண்டு. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் மூடிய நடு இதழ்குவி உயிர் என்னும் பெயரே பயன்படுகிறது. எனினும் பெருமளவிலான மொழியியலாளர்கள் மூடிய என்ற பயன்பாட்டுக்குப் பதிலாக மேல் அல்லது உயர் என்ற சொற்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஒலிக்கான அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு ʉ என்பது. இது, u மீது ஒரு சிறிய கிடைக்கோட்டை இட்டுப் பெறப்படுகிறது. இவ்வொலியையும், அதன் குறியீட்டையும் கோடிட்ட-யூ (barred-u) என்பர்.

பெரும்பாலான மொழிகளில் இந்த உயிரை, முன் நீட்டிய இதழ் அமைவுடன் (புற இதழ் குவிவு) ஒலிக்கின்றனர். முன் நீட்டாமல் அழுத்திக் குவிந்த (அக இதழ் குவிவு) உதடுகளுடனும் சில மொழிகளில் இதனை ஒலிப்பது உண்டு.

ஒலிப்பிறப்பு இயல்புகள்


பா · · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • Loudspeaker.svg.png ஒலி
முன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்
மேல்
Blank vowel trapezoid.svg.png
iy
ɨʉ
ɯu
ɪʏ
ʊ
eø
ɘɵ
ɤo
ɛœ
ɜɞ
ʌɔ
æ
aɶ
ä
ɑɒ
கீழ்-மேல்
மேலிடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.

  • நிலைக்குத்துத் திசையில் நாக்கின் நிலை (உயிரொலி உயரம்) மேலண்ணத்தை அண்டி, வாய்க்குள் மேல் நிலையில் இருக்கும். இன்னொரு வகையில் சொல்வதானால், தாடை மேலெழுந்து ஓரளவு மூடிய நிலையில் இருக்கும். இந்நிலை தொண்டைக் குழியில் இருந்து வரும் காற்றுக்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தாது.
  • கிடைத்திசையில் நாக்கின் நிலை (உயிரொலிப் பின்னியல்பு) வாயின் நடுப்பகுதியில் அமையும். அதாவது முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும், பின்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும் இடையில் அமைந்திருக்கும்.
  • இதனை ஒலிக்கும்போது உள்ள இதழமைவு நிலை, இதழ்குவி நிலையாகும். பொதுவாக இதழ்கள், அவற்றின் உட்பகுதி வெளியே தெரியுமாறு முன் நீட்டிக் காணப்படும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=மேல்_நடு_இதழ்குவி_உயிர்&oldid=19911" இருந்து மீள்விக்கப்பட்டது