முரட்டு காளை (2012 திரைப்படம்)
முரட்டு காளை | |
---|---|
இயக்கம் | கே. செல்வ பாரதி |
தயாரிப்பு | அமிர்தம் குணநிதி |
கதை | கே. செல்வ பாரதி |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு | சுந்தர் சி சினேகா சிந்து தொலானி சுமன் விவேக் |
ஒளிப்பதிவு | சான்ரனியோ ரார்சியோ |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல். ஸ்ரீகாந்த் என். பீ. |
கலையகம் | சூர்யா புரடக்சன் |
விநியோகம் | ஐங்கரன் இண்டர்நேசனல் |
வெளியீடு | 15 சூன் 2012[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முரட்டு காளை 2012 (murattukaalai 2012) இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். கே. செல்வ பாரதி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 1980 ல் அதே பெயரில் வெளியான திரைப்படத்தின் மீள்உருவாக்கம் ஆகும். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் சுந்தர் சி. மற்றும் சினேகா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் சூன் 15, 2012 ல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் தோல்விப் படமாக அமைந்தது [2] மேலும் இத்திரைப்படம் இந்தி மொழியில் "ரிட்டன் ஒவ் ஜோசிலை" எனும் பெயரில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கதைச்சுருக்கம்
காளையன் ஓர் சாதாரண மனிதன். ஜல்லிக்கட்டில் பங்கு பற்றி காளைகளை அடகுவது அவனுடைய தொழிலாகும். இவர்களுடைய எதிரி அயலூர் ஜமீன்தாரான வரதராஜன் (சுமன்) என்பவராவார். ஜமின்டார் ஒரு ஊதாரித்தனமான வாழ்வை வாழ்ந்ததுடன். அவர் திருநங்கையான சரோஜாவுடன் (விவேக்) நெருங்கி பழகிவந்தார். வரதராஜனின் தங்கையான பிரியா (சிந்து தொலானி) காளையன் ஓர் ஐல்லிக்கட்டு போட்டியில் பங்கு பற்றி வெற்றியடைந்ததை பார்த்து ஒரு முகமாக காதலித்து வந்தாள். வரதராஜன் தனது தங்கையான பிரியாவை காளையனுக்கு திருமணம் செய்து வைக்க தீர்மானித்தான். அத்தோடு தமது நிலத்தின் ஒரு பகுதியையும் வழங்க தீர்மானித்தான். ஆனால் பிரியா தனது சகோதரர்களை தம்மிடம் இருந்து பிரிக்கத்தான் வருகிறாள் என்பதை அறிந்த காளையன் அவளை திருமணம் செய்ய மறுக்கிறான். பின்னர் புவனா மீது ஆசைகொள்ள படத்தின் மீதிக்கதை அவர்களுக்கு இடையே நடக்கும் காதலையும் அடிப்படையாக கொண்டிருந்தது.
நடிகர்கள்
- சுந்தர். சி - காளையன்
- சினேகா - புவனா
- சிந்து தொலானி - பிரியா
- சுமன் - வரதராஜன்
- விவேக் - சரோஜா / சாமி
- மீனால் - சரோஜாவின் பணிப்பெண்
- பெரிய கறுப்பு தேவர் - சரோஜாவின் பாட்டன்
- ஸ்ரன்ட் சில்வா - சுருளி
- தேவா
- விச்சு விஸ்வநாத்
- லொள்ளு சபா ஜீவா
இசை
ஸ்ரீகாந்த் தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கே. செல்வ பாரதி இத்திரைப்படத்திற்குரிய பாடல்வர்களை எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Sneha's first release post marriage". IndiaGlitz. 9 June 2012. Archived from the original on 10 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "'Murattu Kaalai' coming soon – Tamil Movie News". IndiaGlitz. 2012-02-27. Archived from the original on 2012-03-01. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.