முரசு. நெடுமாறன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முரசு. நெடுமாறன்
முரசு. நெடுமாறன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
முரசு. நெடுமாறன்
பிறந்ததிகதி சனவரி 14 1937
அறியப்படுவது எழுத்தாளர்


முரசு. நெடுமாறன் (பிறப்பு: சனவரி 14 1937) (புகைப்படத்திற்கு நன்றி selliyal.com)மலேசியாவிலுள்ள தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரும், பல்கலைக் கழக பகுதிநேர விரிவுரையாளருமாவார். தமிழ் நெறி மன்றத்தின் நிறுவுநராகவும் உள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1950 தொடக்கம் முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவர் கவிதைகள், குழந்தைக் கவிதைகள் போன்றவற்றையே அதிகம் எழுதி வருகின்றார். இவை இரண்டும் பற்றிய ஆராய்ச்சி எனும் கருப்பொருள்களிலேயே இவரது பெரும்பாலான எழுத்துப் படைப்புகள் காணப்படுகினறன. இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. இவர் பெருமுயற்சியுடன் மலேசியத் தமிழ்க் கவிதைகளைத் திரட்டி ஓர் ஆய்வுக் கட்டுரையுடனும் விளக்கக் குறிப்புகளுடனும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட நூலாகப் பதிப்பித்துள்ளார்.

நூல்கள்

சிறுவர் நாடகத் தொகுதிகள் (1987)

  • உயிரா மானமா
  • சிரவணன்
  • பாரதியார் வந்தார்
  • சோளக்கொல்லை பொம்மை
  • வீடு நிறையும் பொருள்
  • நான்கு விஞ்ஞானிகள்
  • விந்தையான விருந்து
  • ஹங்துவா நாடகம்
  • பாட்டு பிறந்த கதை (கட்டுரை)
  • சிறுவர் பாடல்கள்
  • இளந்தளிர், பொன்னி பதிப்பகம், கோலாலம்பூர் 1969
  • அழகுப் பாட்டு (1 & 2), மலேசிய புத்தகாலயம் கோலாலம்பூர் 1976
  • அன்புப் பாட்டு (1 & 2 ), 1976, 1986
  • இன்பப் பாட்டு 1986
  • எங்கள் பாட்டு 1986
  • நன்னெறிப் பாட்டு 1987
  • எழுத்துப் பாட்டு (1 - 3 ), உமா பதிப்பகம் கோலாலம்பூர் 1987
  • பாடிப்பழகுவோம் (1 & 2), அருள்மதியம் கிள்ளான் 2005
  • சிறுவர் பாட்டமுதம் அருள்மதியம் கிள்ளான் 2021

களஞ்சியம்

  • மலேசிய தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (அருள்மதியம் பதிப்பகம், கிள்ளான் 1997)
  • உலகத் தமிழ்க் களஞ்சியம் (அருள்மதியம் பதிப்பகம், கிள்ளான் 2018)

ஆய்வு நூல்

  • மலேசியத் தமிழரும் தமிழும் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 2007)

உசாத்துணை

  • மலேசிய தமிழ்க் கவிதைக் களஞ்சியம், அருள்மதியம் பதிப்பகம், கிள்ளான் 1997
  • பாப்பாவின் பாவலர் முனைவர் முரசு நெடுமாறன், முனைவர் ஏ. எழில்வசந்தன், கலைஞன் பதிப்பகம், சென்னை, 2016

வெளி இணைப்பு

மு. இளங்கோவன், மே 2020

பணிகள்

வகுப்பறைகள், மேடைகள் மட்டுமல்லாது வானொலியில் கல்வி ஒலிபரப்பில் இவரது பாடல்கள் பரவலாக இடம் பெற்றுள்ளன. இவற்றை ஒலிப்பேழைகளில் பதிவு செய்தும் பரப்பி வருகிறார். இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பல ஆண்டுகளாக இலவசமாகத் தமிழ்ப் பாடம் போதித்து வந்துள்ளார். ஆண்டுதோறும் மாணவர்களைக் கொண்டு மாணவர் பண்பாட்டு விழாக்கள் நடத்தியுள்ளார்.

கல்விசார் விருதுகள்

  • "தமிழ்மணி" பட்டம்
  • இலக்கிய இளங்கலை பட்டம்
  • முதுகலை பட்டம்
  • முனைவர் பட்டம்

பிற விருதுகள்

  • அரசாங்கம் PPN விருது வழங்கியுள்ளது (1978)
  • தங்கப் பதக்கம் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1986)
  • டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் விருது "மலேசியக் கவிதைக் களஞ்சியம்" நூலுக்காக (1998)
  • "பாவேந்தர்" விருது - தமிழக அரசு (1998)
  • கவிதை விருது கவிதை எண்டர்பிரைஸ் (2000)
  • "தமிழவேள்" விருது - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் (2001)
  • "முத்தமிழ் அரசு" விருது - உலகத் தமிழாசிரியர் பேரவை (2002)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=முரசு._நெடுமாறன்&oldid=6398" இருந்து மீள்விக்கப்பட்டது