முத்திநிலை (நூல்)
Jump to navigation
Jump to search
தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் 16ஆம் நூற்றாண்டில் எழுதிய நூல் முத்திநிலை. இதில் முத்தி பற்றிய ஆன்மானந்த வாதம் மறுக்கப்பட்டுள்ளது. நூலில் 19 வெண்பாக்கள் உள்ளன.
நூலின் முதல் பாடல் – எடுத்துக்காட்டு [1]
- சிவசத்தியைத் திளைப்பர் சீவன் முத்தர் என்றும்
- அவசத்தி மாயாது அகம் என் – சிவசத்தி
- தன்னைக் கண்டு இங்கு அருளால் சச்சிதானந்தம் எனும்
- மன்னைத் திளைத்து வாழ்வார்.
சிவசத்தியைக் கண்டு திளைப்பதுதான் சீவன் முத்தி.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ பொருள் நோக்கில் பிரித்து எழுதிக் காட்டப்பட்டுள்ளது