மலையத்துவச பாண்டியன் (புராணம்)
Jump to navigation
Jump to search
மலையத்துவச பாண்டியன் மகாபாரத போரில், பாண்டவர்களுக்கு ஆதரவாக மகா பாரத போரில் கலந்துகொண்டு, அஸ்வத்தாமனால் கொல்லப்பட்ட மா வீரன் ஆவான். மதுரை மீனாட்சியின் தந்தையும் பாண்டியர்களின் மூதாதையர் ஆவார். இவர் பெயர் மகாபாரதத்தில் உண்டு. பாண்டியர் இலக்கியங்களிலும் புராணங்களிலும் குறிப்பிடப்படும் தொன்பியல் பாண்டியர்களுள் ஒருவன். இவன் மதுரை தலைநகரமாகும் முன் கல்யாணபுரம் என்னும் ஊரை தலைநகராக வைத்து ஆண்ட இரண்டவது பாண்டியன் என்று புராணங்களில் கூறப்படுகிறான்.[1] இவன் சூரசேன சோழனின் மகளை திருமணம் செய்ததாகவும் இவனது மகளான தடாதகை என்ற பாண்டிய அரசியே மீனாட்சி அம்மன் என்றும் புராணங்கள் மூலம் அறிய முடிகிறது.