மலேசிய நண்பன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மலேசிய நண்பன் மலேசியாவில் இருந்து வெளிவரும் ஒரு தமிழ் நாளிதழ். அமரர் டத்தோ சிக்கந்தர் பாட்சா அதன் உரிமையாளர். அவரின் புதல்வர் மைடின் சிக்கந்தர் பாட்சா பொறுப்பேற்று நாளிதழை நடத்தி வருகிறார்.

நாளிதழின் தலைமையாசிரியராக எம்.எஸ்.மலையாண்டி இருக்கிறார். பாதாசன், சந்திரசேகர், காரைக்கிழார், கரு.கார்த்திக், நாகசாமி போன்ற இதழியலாளர்கள் ஆசிரியர் குழுவில் பணியாற்றுகின்றனர். நா. பார்த்திபன் விளையாட்டு பகுதி ஆசிரியராகவும், பழ.எ.அன்பழகன் ஞாயிறு சிறப்பிதழ் பொறுப்பாசிரியராகவும் பங்காற்றுகின்றனர். ’கணினியும் நீங்களும்’, ‘மாணவர் சோலை’ பகுதிகளை [மலாக்கா முத்துக்கிருஷ்ணன்] நடத்தி வருகிறார். வடமலை நிருவாகியாகவும், சிவநேசன் தொழிலாளர் நலப்பிரிவு அதிகாரியாகவும் செயலாற்றுகின்றனர்.

அமரர் ஆதிகுமணன் தலைமையில் சில காலம் மலேசிய நண்பன் நாளிதழ் நடத்தப்பட்டது. ஆதிகுமணன் மறைவுக்குப் பின்னர் நிர்வாக மாற்றம் இடம்பெற்றது. சிக்கந்தர் பாட்சா அவர்களின் மறைவுக்குப் பின்னர் மீண்டும் ஆசிரியர் குழுவில் மாற்றம் ஏற்பட்டது.

ஏறக்குறைய 15 ஆண்டு காலமாக மலேசிய நண்பனின் துணைத் தலைமையாசிரியராக பணியாற்றிய மு. (எம்) இராஜன் விலகி புதிதாக வெளிவந்துக் கொண்டிருந்த மக்கள் ஓசை நாளேட்டில் ஆசிரியராக இணைந்தார். அவருடன் 5 முக்கிய செய்தியாளர்கள் மக்கள் ஓசையில் இணைந்தனர்.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:இதழ்-குறுங்கட்டுரை

"https://tamilar.wiki/index.php?title=மலேசிய_நண்பன்&oldid=26715" இருந்து மீள்விக்கப்பட்டது