மலரவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மலரவன் ஒரு ஈழத்து எழுத்தாளர். இவர் எழுத்தாளர் மலரன்னையின் இளைய மகன் மற்றும்மூத்த எழுத்தாளர் கச்சாயில் இரத்தினத்தின் பேரன்.

இவரது நூல்கள்

  • போர் உலா (நாவல்) - இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான இலக்கிய தேர்வில் (1993) முதல் பரிசு பெற்றது. இதுவரை ஐந்து பதிப்புகளை பெற்றுள்ளது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு பத்திரிகைகளில் தொடராக மீள்பிரசுரமாகியிருக்கிறது. (யாழ்) உதயன் ஞாயிறு சஞ்சிகையில் தொடராக மீள்பிரசுரமாகியதும் குறிப்பிடப்படவேண்டியது. "போர் உலா " தொடர் நாடகமாகவும் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. காட்டூன் வடிவிலும் பிரசுரமாகியுள்ளது. போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பும் war journey என்ற பெயரில் புத்தகமாக வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • என் கல்லறையில் தூவுங்கள் - சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பு
  • மலரவனின் ஹைக்கூ கவிதைகள் - இலங்கையில் வெளியான நான்காவது ஹைக்கூ தொகுப்பு. "ஜீவநதி" யின் ஹைகூ சிறப்பிதழில் அனைத்து கவிதைகளும் மீள்பிரசுரமாகியிருக்கிறது.   
  • புயல் பறவை (நாவல்) - வட கிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிசு பெற்றது(2003). இரண்டாம் பதிப்பு விடியல் பதிப்பகத்தால் வெளியாகியிருக்கிறது.
  • பலவேகயா 2 ற்கு எதிரான சமரின் இராணுவரீதியிலான அழகியல் தொகுப்பே இவரின் இறுதியான பதிவாக இருக்கவேண்டும்.
"https://tamilar.wiki/index.php?title=மலரவன்&oldid=2764" இருந்து மீள்விக்கப்பட்டது