போர் உலா (நாவல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

போர் உலா விடுதலைப்புலிகளின் அமைப்பில், பசீலன் பீரங்கிப் படைப்பிரிவில் பணிபுரிந்த கப்டன் மலரவன் (லியோ, காசிலிங்கம் விஜித்தன்) என்ற இளைஞனின் பயணக்குறிப்புகள் அடங்கிய ஒரு புதினம் ஆகும். இப்புதினம் 1990 இல் இடம் பெற்ற மாங்குளம் இராணுவமுகாம் மீதான தாக்குதலின் அனுபவத்தையும், அந்த நேரத்தில் நடந்த களச்சூழலையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இவர் போரில் 1992 ஆம் ஆண்டு இறந்தார்.[1][2] அவர் இறந்த அடுத்த ஆண்டு இந்த நூல் வெளியானது.[3] போர் உலாவின் ஆங்கில மொழி பெயர்ப்பை war journey என்ற பெயரில் என். மாலதி மொழிபெயர்த்தார்.[4] பென்குயின் வெளியீட்டாளர்களால் war journey வெளியிடப்பட்டது.[2][5] தமிழில் ஐந்து தடவைகள் மீள் பதிப்பு செய்யப்பட்டது. போர் உலா இலங்கை இலக்கியப் பேரவையின் 1993 ஆம் ஆண்டுக்கான இலக்கியத் தேர்வில் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றது. இலங்கையில் வெளியான சிறந்த நாவல்களுக்குள் ஒன்றாகவும் ஆய்வாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்நூலில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குப் பின்னால் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஏற்பாடுகள், தாக்குதல் தொடர்பான தெளிவான விபரங்கள், போரில் ஏற்பட்ட தாங்க முடியாத இழப்புக்கள், போரில் சந்தித்த கடினங்கள், தமிழ் மக்களுடன் ஏற்பட்ட சில முரண்பாடுகள், தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற பல்வேறு விடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்

மேற்சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=போர்_உலா_(நாவல்)&oldid=15178" இருந்து மீள்விக்கப்பட்டது